Indian 2: இறுதி கட்டத்தை எட்டிய இந்தியன் 2 படப்பிடிப்பு! ரிலீஸ் தேதி குறித்து கசிந்த லேட்டஸ்ட் அப்டேட்!
நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாக்கி வரும், 'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த லேட்டஸ்ட் அப்டேட் பற்றிய தகவல் கசிந்துள்ளது.
கடந்த 27 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் இந்தியன். இந்த படத்தில் அப்பா கமல்ஹாசனுக்கு நடிகை சுகன்யா ஜோடியாகவும், மகனாக நடித்த கமல்ஹாசனுக்கு மனிஷா கொய்ராலா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நெடு முடி வேணு, செந்தில், கவுண்டமணி, உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி 'இந்தியன்' திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சு அடிபட்டு வந்த நிலையில், இரண்டாம் பாகம் உருவாவதை கமலஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு உறுதி செய்தனர். மேலும் இப்படத்தில் படப்பிடிப்பு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்ட போதிலும், தற்போது வரை முடிவடையாமல் உள்ளது.
இந்தியன் 2 படத்தை இயக்கி முடிப்பதற்குள் அடுத்தடுத்து பல பிரச்சனைகள் தலை தூக்கி வந்ததால், இயக்குனர் ஷங்கர், இந்தியன் 2 படப்பிடிப்பை முடிக்காமல்... ராம் சரணின் புதிய படத்தை இயக்குவதில் ஆர்வம் காட்ட துவங்கினார். இதை தொடர்ந்து, இந்தியன் 2 படத்தை தயாரித்து வந்த லைகா நிறுவனம் நீதிமன்றம் வரை சென்று, மீண்டும் இயக்குனர் ஷங்கரை இப்படத்தை இயக்க வைத்தது.
ஒரு வழியாக மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு பரபரப்பாக துவங்கிய நிலையில், இந்த மாதத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது. அதன்படி இந்தியன் 2 திரைப்படம், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என தெரிகிறது. அதேபோல் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகளும், கிராபிக்ஸ் பணிகளும் வெளிநாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காட்டிக்கொடுத்த பார்த்திபன்! பொன்னியின் செல்வன் இன்கம் ரெய்டு மேட்டரை கூறி பகீர் கிளப்பிய பயில்வான்!
இந்தியன் 2 படத்தில், கமலஹாசனுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார். விவேக், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, மனோபாலா, டெல்லி கணேஷ், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். எஸ் ஜி சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியன் 2 படத்திற்கு ஏ ஆர் ரகுமான் மற்றும் அனிருத் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். கமல்ஹாசனின், விக்ரம் படத்தை தொடர்ந்து ஒட்டு மொத்த ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.