நடிகர் பிரபாஸ் நடிப்பில் நேற்று வெளியான, 'ஆதிபுருஷ்' படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களை நீக்குவதற்காக, பணம் கொடுப்பதாக படக்குழு பேரம் பேசி வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கீர்த்தி சனோன், சைப் அலிகான் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், இதிகாச புராண கதைகளில் ஒன்றான இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இந்த படத்தில் ராமராக பிரபாஸ் நடித்துள்ளார். சீதாவாக கீர்த்தி சனோன் நடிக்க, பாலிவுட் நடிகர் சைப் அலிகான் இலங்கை மன்னர் ராவணன் வேடத்தில் நடித்துள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், சுமார் 600 கோடி பட்ஜெட்டில் 3d தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ள 'ஆதிபுருஷ்' திரைப்படம் நேற்று (ஜூன் 16) அன்று வெளியான நிலையில், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இப்படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், தெலுங்கானா, ஆந்திரா, மற்றும் மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும், ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

இது தான் நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு! மாணவ - மாணவிகளிடம் விஜய் வைத்த கோரிக்கை!
அதேபோல் இப்படத்தில் இடம்பெற்ற VFX காட்சிகள் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. 'சீதா இந்தியாவின் மகள்' போன்ற ஒரு சில வசனங்கள் சர்ச்சையிலும் சிக்கியுள்ளன.
மேலும் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் மிகப்பெரிய ராமாயணத்தின் கதையை, ஒரு படமாக மூன்று மணி நேரத்தில் கூறும் போது இப்படி தான் இருக்கும் என்றும், மற்றபடி 'ஆதிபுருஷ்' படத்தில் இடம்பெற்ற பாடல்கள், இசை, படத்தை கொண்டு சென்ற விதம், போன்றவை திருப்திகரமாக இருப்பதாக ஒரு தரப்பினர் கூறி வந்தாலும், மற்றொரு தரப்பினர், பல காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என தங்களின் வருத்தத்தை வெளிப்படையாக கூறி நெகடிவ் விமர்சனங்கள் கொடுத்து வருகிறார்கள்.

இப்படி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் 'ஆதிபுருஷ்' படத்தை பார்த்து விட்டு, நெகடிவ் விமர்சனம் கூறிய ரசிகர்களுக்கு, 'ஆதிபுருஷ்' படக்குழுவில் இருந்து சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டு, படம் குறித்த நெகட்டிவ் விமர்சனத்தை நீக்கினால் 5500 முதல் 9500 வரை பேரம் பேசப்பட்டதாக இருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
படிப்பது மட்டும் முழுமையான கல்வி இல்லை! குட்டி ஸ்டோரி மூலம் இரண்டு விஷயங்களை கூறிய தளபதி விஜய்!
"நிமோ யாதவ் என்பவருக்கு 9500 ரூபாய் கொடுப்பதாக, பேரம் பேசியதாக அவரே தன்னுடைய சமூக வலைதளத்தில் ஸ்கிரீன் ஷாட் உடன் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ரோஷன் ராஜ் என்பவரையும், படக்குழு சார்பில் தொடர்பு கொண்டு 5500 ரூபாய் கொடுப்பதாகவும், நீங்கள் பதிவிட்ட பதிவை உடனடியாக நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதற்க்கு அந்த ரசிகர், 50,000 கொடுத்தாலும் நான் இந்த பதிவை நீக்க மாட்டேன், நீங்கள் எதிர்பார்க்கும் ஆள் நான் இல்லை என காட்டமாக கூறியுள்ளார். இந்த பதிவுகள் தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதே நேரம் இப்படி சமூக வலைத்தளம் மூலம் பேசியது, உண்மையிலேயே 'ஆதிபுருஷ்'பட குழுவை சேர்ந்தவர்கள் தானா? அல்லது வேறு யாரேனும் அவர்களின் பெயரை வைத்து இது போன்ற தகாத வேளையில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து பட குழு தரப்பில் இருந்து, விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்க கைய வச்சு உங்க கண்ணை குதிக்காதீங்க! மாணவர்கள் மத்தியில் அரசியல் குறித்து விஜய் பரபரப்பு பேச்சு!
