Asianet News TamilAsianet News Tamil

உங்க கைய வச்சு உங்க கண்ணை குதிக்காதீங்க! மாணவர்கள் மத்தியில் அரசியல் குறித்து விஜய் பரபரப்பு பேச்சு!

தளபதி விஜய், இன்று தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கிய நிகழ்வில் அரசியல் பற்றி பேசியது பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Actor Vijay sensational speech about politics in front of students
Author
First Published Jun 17, 2023, 12:15 PM IST

தமிழ்நாட்டில் அண்மையில் வெளியான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு தன்னுடைய பக்கத்தில் இருந்து ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்த, தளபதி, தன்னுடைய 'விஜய் மக்கள் இயக்கம் சார்பில்' இன்று ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்து வருகிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த நிகழ்ச்சி துவங்கிய நிலையில், புஸ்ஸி ஆனந்த் இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றினார். இதை தொடர்ந்து மேடைக்கு வந்த விஜய்... எத்தனையோ ஆடியோ லான்ச்சில் பேசியுள்ளேன் ஆனால், இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் பேசுவது இது தான் முதல் முறை என தன்னுடைய பேச்சை துவங்கினார்.

Actor Vijay sensational speech about politics in front of students

'விஜய் கல்வி விருது விழா' எளிமையாக வந்து மாணவர்கள் மத்தியில் அமர்ந்து கலகலப்பூட்டிய தளபதி!

அப்போது, பல்வேறு விஷயங்களை பற்றி பேசிய விஜய் நாளைய வாக்காளர்கள் நீங்கள் தான் என அரசியல் குறித்தும்... தற்போதைய அரசியலை விமர்சிக்கும் விதமாகவும் பேசியுள்ளார். "நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்து புதிதாக நல்ல நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க போகிறீர்கள். அதேபோல் நம்ம விரலை வைத்து நம்ப கண்ணையே குத்தி கொள்வது என்கிற என்ற ஒரு விஷயம் இருக்கு கேள்வி பட்டு இருக்கீங்களா? அதை தான் இப்போ நாம செஞ்சுக்கிட்டு இருக்கோம்.

Actor Vijay sensational speech about politics in front of students

Adipurush Box Office: முதல் நாளே வசூலில் பட்டையை கிளப்பிய பிரபாஸின் 'ஆதிபுருஷ்'! இந்திய அளவில் செய்த சாதனை!

காசு வாங்கி கொண்டு ஓட்டு போட்டு கொண்டு இருக்கிறோம். ஒருவர் 15 கோடி செலவு செய்கிறார் என்றால் அதற்கு முன் அவர் எவ்வளவு சம்பாதிச்சு இருக்கணும். உங்களுடைய எஜுகேசன் சிஸ்டம்ல இதெல்லாம் கத்துக் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். அது எப்போ நடக்கும்னு தெரியல. ஆனால் ஒவ்வொரு மாணவர்களும், தங்களுடைய அப்பா - அம்மாவை காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க என்று சொல்லணும். இதற்க்கு  முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் சொன்னீங்கன்னா அவங்க கேட்பாங்க. ஏன்னா நீங்க தான் அடுத்தடுத்த வருடங்களில் வரும் புதிய வாக்காளர்கள் என கூறினார். இவரது இந்த பேச்சு அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios