- Home
- Cinema
- 'விஜய் கல்வி விருது விழா' எளிமையாக வந்து மாணவர்கள் மத்தியில் அமர்ந்து கலகலப்பூட்டிய தளபதி!
'விஜய் கல்வி விருது விழா' எளிமையாக வந்து மாணவர்கள் மத்தியில் அமர்ந்து கலகலப்பூட்டிய தளபதி!
தளபதி விஜய், நடத்தி வரும் கல்வி விருது விழாவிற்கு வருகை தந்து, மாணவர்களுக்கு மத்தியில் அமர்ந்து ஊக்கப்படுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், அனைத்து தொகுதியிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கும் விதமாக பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று காலை மிகவும் பிரமாண்டமாக துவங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மாணவர்களுக்கு ஊக்க தொகை கொடுத்து, கௌரவிப்பதற்காக மிகவும் எளிமையாக வெள்ளை நிற ஷர்ட் மற்றும் கருப்பு நிற ஃபார்மல் பேன்ட்டில் எளிமையாக வருகை தந்தார் விஜய்.
சில நிமிடங்கள், முதல் வரிசையில் அமர்ந்திருந்த விஜய், பின்னர்... மாணவ, மாணவிகளுக்கு நடுவே அமர்ந்து கலகலப்பாக பேசினார்.
விஜய் வந்த உடனே, தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கிய நிலையில், புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை வழங்கிய பின்னர், தளபதி விஜய் மேடைக்கு சென்று சில நிமிடங்கள் பேசிவிட்டு பின்னர்... மாணவ - மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.