Adipurush Box Office: முதல் நாளே வசூலில் பட்டையை கிளப்பிய பிரபாஸின் 'ஆதிபுருஷ்'! இந்திய அளவில் செய்த சாதனை!
நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான புராண காவியமான 'அதிபுருஷ்' திரைப்படம் இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த படங்களில் டாப் 5 லிஸ்டில் இணைந்துள்ளது.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் ராமாயணம் புராண கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது.
Adipurush 001
தமிழகத்திலும், ஆந்திராவிலும் பல்வேறு இடங்களிலில் அதிகாலை காட்சிகளும் திரையிடப்பட்டன. தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை என்றாலும், ஆந்திர மக்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். நேற்று காலை முதலே பாட்டாசுகள், பால் அபிஷேகம் என திரையரங்குகளை களைகட்ட வைத்தனர்.
VFX காட்சிகளில் மட்டுமே எதிர்பார்த்தது போல் இல்லை என பெருவாரியான ரசிகர்கள் கூறி வந்த நிலையில், மற்றபடி படம் பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஆனால் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு நேற்று வரவேற்பு இல்லை என்றாலும் இன்று, ரசிகர்கள் பலர் 'ஆதிபுருஷ்' படத்தை பார்ப்பார்கள் என கூறப்படுகிறது.
மேலும் நேற்று ஒரே நாளில் மட்டுமே உலகளவில் 'ஆதிபுருஷ்' திரைப்படம் வசூலில் மாஸ் காட்டியுள்ளது. அதாவது இதுவரை இந்திய அளவில் அதிக வசூல் செய்த படங்களில் 'ஆதிபுருஷ்' திரைப்படம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஆதிபுருஷின் முதல் நாள் வசூலுக்கான பிராந்திய விவரம் பின்வருமாறு:
நிஜாம் - ரூ.18 கோடி
சீடெட் - ரூ. 5 கோடி
ஆந்திரா - ரூ. 16 கோடி
ஆந்திரா / தெலுங்கானா - ரூ. 39 கோடி
கர்நாடகா - ரூ. 6.50 கோடி
தமிழ்நாடு/கேரளா - ரூ. 2 கோடி
இந்தியாவின் மற்ற பகுதிகள் - ரூ. 40.50 கோடி
மொத்தத்தில் இந்தியாவில் மட்டும் - ரூ. 88 கோடி வசூலித்துள்ளது.
'ஆதிபுருஷ் படத்தின், வெளிநாட்டு வசூல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் ஆரம்ப எண்ணிக்கையைப் பொறுத்தவரை, அவை சுமார் $3 மில்லியனாக இருக்கும், என யூகிக்க படுவதால் உலகளாவிய முதல் நாளிலேயே சுமார் ரூ. 115 கோடி. வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது 'ஆதிபுருஷ் குறிப்பிடத்தக்கது.