- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தினேஷை அடிச்சு ஓடவிட்ட முத்து... விஜயாவுக்கு வக்கீல் கொடுத்த வார்னிங் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
தினேஷை அடிச்சு ஓடவிட்ட முத்து... விஜயாவுக்கு வக்கீல் கொடுத்த வார்னிங் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றி அனைவருக்கும் தெரிந்த உண்மையை புதிதுபோல் முத்துவிடம் வந்து சொல்லி செம அடி வாங்கி இருக்கிறார் தினேஷ். அதைப்பற்றி பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியிடம் இருந்து டைவர்ஸ் பெற முடியாமல் மனோஜ் ஒரு புறம் திணறிக்கொண்டிருக்க, மறுபுறம் அவரது அம்மா விஜயா, மகனுக்கு இரண்டாம் திருமணம் செய்வதற்கான வேலைகளில் இறங்கி பல்பு வாங்கி வருகிறார். இதுபோதாதென்று, ரோகிணியை அடிக்கடி மிரட்டும் தினேஷ், தற்போது அவரிடம் மீண்டும் பணம் கேட்க, அதற்கு ரோகிணி தன்னிடம் பணம் இல்லை என சொன்னதும். உன்னைப்பற்றிய உண்மைகளை எல்லாம் முத்துவிடம் சொல்லப் போகிறேன் என கூறிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
முத்துவுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்
முத்து தன்னுடைய கார் ஷெட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு மீனா வருகிறார். அதே நேரத்தில் ஒரு காரும், வேனும் வருகிறது. அந்த காரில் வந்தது வேறுயாருமில்லை. முத்து அபார்ட் மெண்டில் ஒரு மனநலம் குன்றிய சிறுவனை காப்பாற்றி இருந்தார். அவர்களின் பெற்றோர் முத்துவுக்கு உதவி செய்வதாக கூறி இருந்தனர். அதற்காக தான் தற்போது அவருக்கு ஒரு வேன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர். தங்கள் அபார்ட்மெண்டில் அடிக்கடி டிரிப் செல்வார்கள், அதற்கு அந்த வேனை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கும் நிறைய வருமானம் வரும் என கூறி சென்றுள்ளனர். இதனால் செம குஷியில் உள்ளார் முத்து.
அடிவாங்கிய தினேஷ்
இதையடுத்து முத்துவின் கார் ஷெட்டிற்கு தினேஷ் செல்கிறார். அங்கு முத்துவிடம் தான் ஒரு உண்மையை சொல்ல உள்ளதாக கூறி, ரோகிணி பற்றி முத்துவுக்கு ஏற்கனவே தெரிந்த உண்மைகளை ஒவ்வொன்றாக சொல்கிறார். அது தனக்கு தெரியாதது போல் நடிக்கும் முத்து, அவரிடம் என்ன வேண்டும் என கேட்க, தனக்கு பணம் வேண்டும் என சொல்கிறார் தினேஷ். உடனே அவரை அங்கிருந்த ஒரு ரூமுக்குள் அழைத்துச் செல்லும் முத்து அவருக்கு தர்ம அடி கொடுக்கிறார். மூஞ்சு வீங்கியபடி வெளியே வரும் தினேஷ், இனிமேல் இதுபோன்று செய்யமாட்டேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார்.
வக்கீலை சந்திக்கும் விஜயா
மறுபுறம் விஜயாவும், மனோஜும் வக்கீலை பார்க்க சென்றிருக்கிறார்கள். அப்போது, முத்துவும் மீனாவும் அங்கு வருகிறார்கள். வந்ததும் மீனா, விஜயாவிடம் எப்படி இருக்கீங்க அத்தை என கேட்க, அதற்கு அவர் வாய் திறக்காமல் சைலண்டாகவே இருக்கிறார். இதைப்பார்த்த வக்கீல் நீங்க மீனாவுக்கு பதில் சொல்லுங்க என சொன்னபிறகு தான் நல்லா இருக்கேன் என கூறுகிறார். பின்னர் மனோஜுக்கும், ரோகிணிக்கும் இடையேயான டைவர்ஸ் கேஸில் கவுன்சிலிங் நடைபெற இருப்பதாகவும், அதில் என்னென்ன செய்ய வேண்டும் என்று மனோஜுக்கு ஐடியா கொடுக்கிறார் அந்த வக்கீல்.
வக்கீல் கொடுத்த வார்னிங்
அப்போது அவரிடம் மனோஜுக்கு டைவர்ஸ் கிடைக்கும் முன்பே அவனுக்கு இரண்டாவது திருமணம் செய்யலாமா என முட்டாள்தனமான கேள்வியை விஜயா கேட்கிறார். அதற்கு அந்த வக்கீல், நீங்க அப்படி செஞ்சீங்கனா உங்கள தூக்கி ஜெயில்ல போட்டிருவாங்க என சொன்னதும் விஜயா ஷாக் ஆகிறார். தற்போது நிச்சயதார்த்தம் கூட செய்யக் கூடாது என எச்சரிக்கிறார் வக்கீல். அதற்கு விஜயா, பெண்ணாவது பார்க்கலாமா என கேட்க, அது பார்த்துக் கொள்ளலாம் என கூறுகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

