இது தான் நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு! மாணவ - மாணவிகளிடம் விஜய் வைத்த கோரிக்கை!
தளபதி விஜய் வெற்றிபெற்ற மாணவர்களுக்காக தற்போது விழா நடத்தி பரிசுகள் கொடுத்து பாராட்டி இருந்தாலும், தோல்வியடைந்த மாணவர்களுக்காக உருக்கமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த, 10 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த, மாணவ - மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக, தளபதி விஜய் ஊக்கத்தொகை கொடுத்து பாராட்டு விழா நடத்த உள்ளதாக, ஏற்கனவே சில தகவல் வெளியானதை தொடர்ந்து, இன்று காலை சென்னை நீலாங்கரை பகுதியில் இருக்கும் ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் இதற்கான விழா சிறப்பாக நடந்து முடிந்தது.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளுக்கான செலவுகளையும் தளபதி விஜய்யே ஏற்றுக்கொண்டார். மேலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் வந்து செல்லும் செலவு, அவர்களுக்கான தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்தையும், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்கள் கூடவே இருந்து எந்த ஒரு குறையும் இன்றி கவனித்துக் கொண்டனர்.
படிப்பது மட்டும் முழுமையான கல்வி இல்லை! குட்டி ஸ்டோரி மூலம் இரண்டு விஷயங்களை கூறிய தளபதி விஜய்!
இந்த பிரமாண்ட விழாவிற்கு, இன்று காலை மிகவும் எளிமையாக வருகை தந்த தளபதி விஜய் மாணவர்களிடம் 10 நிமிடம் பரபரப்பாக பேசிவிட்டு, பின்னர் ஊக்கத்தொகை மற்றும் அதற்கான சான்றிதழ்களை வழங்கினார். குறிப்பாக மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி நந்தினிக்கு விஜய் சார்பில் வைர நெக்லஸ் ஒன்றும் பரிசாக அளிக்கப்பட்டது.
மேலும் அனைத்து மாணவர்களுக்கும், தன்னுடைய கைகளாலேயே பரிசு வழங்கினார் தளபதி விஜய். அதற்கு முன்னதாக மாணவர்களிடம் பேசும் போது, அதிகம் படிப்பது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்று. பெரியார், அம்பேத்கர், காமராஜர், ஆகியோர் பற்றி ஒவ்வொரு மாணவர்களும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். படிப்பை விட ஒவ்வொரு மாணவ - மாணவிக்கும் அவர்களுடைய கேரக்டரும், சிந்திக்கும் திறனும் தான் உண்மையான கல்வி என கூறினார். அதைப்போல் அசுரன் படத்தில் வரும் வசனத்தை கூறி, காடு இருந்தா புடுங்கிப்பானுங்க, பணம் இருந்தா எடுத்துப்பானுங்க ஆனா படிப்ப மட்டும் யாராலயும் எடுத்துக்க முடியாது என்று கூறி , படிப்பு என்பது எந்த அளவுக்கு ஒவ்வொருவருக்கும் முக்கியம் என்பதை கூறினார்.
உங்க கைய வச்சு உங்க கண்ணை குதிக்காதீங்க! மாணவர்கள் மத்தியில் அரசியல் குறித்து விஜய் பரபரப்பு பேச்சு!
அதே போல் இந்த பிரமாண்ட விழா... அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், அண்மையில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பற்றியும் தளபதி பேசினார். அப்போது தோல்வியடைந்த மாணவர்களுக்கு வெற்றி அடைந்த மாணவர்கள் நம்பிக்கை கொடுக்கும் விதமாக பேசி அவர்களுக்கு உங்களால் முடிந்ததை கற்றுக் கொடுங்கள். அதன் மூலம் அவர்கள் வெற்றி பெற்றால் அதுதான் நீங்கள் எனக்கு கொடுக்கும் மிகச் சிறந்த பரிசு என தெரிவித்தார். அதேபோல் தோல்வியால் மாணவர்கள் யாரும் துவண்டு விட கூடாது என்றும், தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.இவருடைய இந்த பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.