படிப்பது மட்டும் முழுமையான கல்வி இல்லை! குட்டி ஸ்டோரி மூலம் இரண்டு விஷயங்களை கூறிய தளபதி விஜய்!
தளபதி விஜய் இன்று நடைபெற்ற, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், குட்டி ஸ்டாரி மூலம், படித்தால் மட்டும், அது முழுமையான கல்வி இல்லை என, ஒரு சிறு உதாரணத்தோடு குட்டி ஸ்டோரி கூறினார்.
vijay
தளபதி விஜய்யின் அரசியல் வருகை குறித்த பேச்சு பல வருடங்களாக அடிபட்டு வந்தாலும், கடந்த இரண்டு வருடங்களில், விஜய் அதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருவது போல் பல விஷயங்களை அடுத்தடுத்து செய்து வருகிறார். அந்த வகையில் அம்பேத்கார் பிறந்தநாளில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த கூறியது முதல், பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மதியம் ஒரு வேளை உணவை இலவசமாக வழங்கியது வரை, ஒவ்வொரு செயலாலும் மக்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் அண்மையில் வெளியான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று ஊக்கத்தொகை மற்றும், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி, நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று காலை மிகவும் பிரமாண்டமாக நடந்தது.
'விஜய் கல்வி விருது விழா' எளிமையாக வந்து மாணவர்கள் மத்தியில் அமர்ந்து கலகலப்பூட்டிய தளபதி!
இந்த நிகழ்ச்சியில் மாநில அளவில் 600 / 600 மதிப்பெண் எடுத்த, மாணவி நந்தினிக்கு ஊக்கத்தொகை வழங்கியது மட்டும் இன்றி, வைர நெக்லஸ் ஒன்றையும் பரிசாக வழங்கினார். இதை தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் தன்னுடைய கைகளாலேயே பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்விற்கு முன்னதாக... மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், படிப்பு மட்டுமே முழுமையான கல்வி இல்லை, என்பதை கூறி... அவர்களுக்கு எளிமையாக புரியும் விதத்தில் குட்டி ஸ்டோரி ஒன்றையும் கூறினார்.
இதுகுறித்து விஜய் பேசுகையில்... "நான் பல ஆடியோ லான்ச்சில் பேசி இருக்கிறேன் ஆனால், இப்படி ஒரு நிகழ்ச்சியில் பேசுவது.. இது தான் முதல் முறை. நான் படிக்கும் போது... மிகவும் பிரைட் ஸ்டுடென்ட் கிடையாது. ஆவரேஜ் ஸ்டுடென்ட் தான். உங்களுக்காக எனக்கு பிடித்த இரண்டு - மூன்று விஷயங்களை ஷேர் செய்கிறேன். பிடித்தால் எடுத்துக் கொள்ளுங்கள்... என கூறி தன்னுடைய குட்டி கதையை துவங்கினார்.
பள்ளி - கல்லூரிகளுக்கு சென்று, முதல் மதிப்பெண் எடுக்கும் அளவிற்கு படிப்பது மட்டுமே, முழுமையான கல்வி கிடையாது. நாள் சொல்ல போவது ஐன்ஸ்டீன் அவர்கள் சொன்ன விஷயம் தான். பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று பல பாடங்களை நாம் படிக்கலாம். ஆனால் அதனை மறந்த பின்பும் நம்முடன் எந்த விஷயம் கூடவே இருக்குமோ அது தான் நாம், வாழ்க்கைக்காக கற்றுக்கொண்ட பாடம்.
அப்படி கடைசி வரை உங்களுடனே இருப்பது, உங்களின் கேரக்டரும், சிந்திக்கும் திறனும் தான். இவை இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்தால் தான் அது முழுமையான கல்வியாக இருக்கும். பணத்தை இழந்தால் ஒரு சின்ன பொருளை இழந்த மாதிரி, ஆரோக்கியத்தை இழந்தால் சிலவற்றை இழந்தது போல், ஆனால் கேரக்டரை இழந்தீங்கன்னா எல்லாத்தையும் இழந்து விடுவீர்கள். அதற்காக வாழ்க்கையில் எதையும் என்ஜாய் பண்ண கூடாது என்பது இல்லை. இருப்பது ஒரு வாழ்க்கை அதனை நன்றாக என்ஜாய் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
உங்க கைய வச்சு உங்க கண்ணை குதிக்காதீங்க! மாணவர்கள் மத்தியில் அரசியல் குறித்து விஜய் பரபரப்பு பேச்சு!