பாக்கிய லட்சுமி சீரியலில் இருந்து விலகிய ராதிகா வெள்ளித்திரையில் என்ட்ரி! திரைப்படம் குறித்து வெளியான தகவல்!

பாக்கிய லட்சுமி சீரியலில் 2020 முதல் 2021 வரை ஒரு வருடம், ராதிகா வேடத்தில் நடித்த ஜெனிபர் நந்திதா கர்ப்பமாக இருந்ததால், திரையுலகை விட்டு விலகிய நிலையில், குழந்தை பிறந்த பின்னர் தற்போது வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Baakiyalakshmi serial Nanditha Jennifer movie latest news

FREDRICKS JOHN & DIGIX MOVIES நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகசர்’. சுனில் கர்மா என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ‘விலங்கு’ வெப்சீரிஸ் புகழ் கிச்சா ரவி, டாக்டர் பிரெட்ரிக்ஸ், சம்பத் ராம், ஜப்பான் குமார், பாக்கிய லட்சுமி தொடரில் ராதிகாவாக நடித்து பின்னர் விலகிய நந்திதா ஜெனிஃபர், பருத்திவீரன் வெங்கடேஷ், ஷாலு சரனேஷ் குமாரா, உஷா எலிசபெத் சுராஜ், ரவி வெங்கிடராம் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரமாக புரூனோ என்கிற நாயும் இதில் இடம் பெற்றுள்ளது.

இந்த படத்தின் கதையை நிகில் ஜினன் மற்றும் ஏ.ஆர்.ரத்தீஷ் இருவரும் இணைந்து எழுதி உள்ளனர் விஜய் பால் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ரமேஷும் படத்தொகுப்பை ஷியான் ஸ்ரீகாந்த்தும் கவனிக்கின்றனர்.

Baakiyalakshmi serial Nanditha Jennifer movie latest news

ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரி ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தன் மனைவியுடன் அமைதியான வாழ்க்கைக்காக மலைப்பாங்கான பகுதியில் ஒரு பங்களாவில் வசிக்கிறார். ஓய்வு பெற்றாலும் கூட போலீசார் சில சிக்கலான வழக்குகளில் இவரது உதவியை நாடுகின்றனர். அதுமட்டுமல்ல சிவில் சர்வீஸ் மாணவர்களுக்கு தனது அனுபவத்திலிருந்து அவ்வப்போது பாடங்களும் எடுக்கிறார்.

நெகட்டிவ் விமர்சனங்களை நீக்க 5500 முதல் 9500 வரை பேரம் பேசுகிறதா 'ஆதிபுருஷ்' படக்குழு? பகீர் குற்றச்சாட்டு!

சில சமயங்களில் தன்னை யாரோ கண்காணிப்பது போலவும் பின் தொடர்வது போலவும் ஒரு உணர்வு அந்த அதிகாரிக்கு ஏற்படுகிறது. ஒரு நாள் பனி சூழ்ந்த இரவு வேளையில் வழிப்போக்கன் ஒருவர் அவரிடம் உதவி கேட்டு வருகிறார். தான் இன்னும் நெடுந்தொலைவு பயணம் செல்ல வேண்டும் என்றும் அதுகுறித்து சம்பந்தப்பட்டவரிடம் தெரிவிக்க அந்த அதிகாரியின் தொலைபேசியை கொடுக்குமாறு கேட்கிறார். 

அவரது நடவடிக்கைகளால் அதிகாரிக்கு சந்தேகம் தோன்றினாலும் அவர் பேசிக்கொண்டு இருக்கட்டும் என உள்ளே சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தால் அந்த வழிப்போக்கனை அங்கே காணவில்லை. பல இடங்களில் தேடிவிட்டு தனது மனைவி படுத்திருக்கும் பக்கத்து அறையின் கதவை திறந்து பார்க்க, அந்த வழிப்போக்கன் அங்கே அவரது துப்பாக்கியை கையில் வைத்தபடி அமர்ந்திருக்கிறான்.

Baakiyalakshmi serial Nanditha Jennifer movie latest news

அவரைப் பார்த்து என்னை உங்களுக்கு நினைவில்லையா என்று கேட்டு அதிர்ச்சியும் அளிக்கிறான். யார் அவன் ? எதற்காக வழிப்போக்கன் போல அதிகாரியின் வீட்டுக்குள் நுழைந்தான் ? அவனுக்கும் அதிகாரிக்கும் இடையே என்ன முன்விரோதம் இருந்தது ? அதிகாரி அவனை சமாளித்தாரா என்பது விறுவிறுப்பான மீதிக்கதை. ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரியாக டாக்டர் பிரெட்ரிக்ஸ், மர்ம நபராக ‘விலங்கு’ வெப்சீரிஸ் புகழ் கிச்சா ரவி, போலீஸ் அதிகாரிகளாக சம்பத் ராம், நந்திதா ஜெனிஃபர் ஆகியோர் நடிக்கின்றனர். ஒரு விறுவிறுப்பான பழிவாங்கும் த்ரில்லர் ஜானரில் இந்தப்படம் உருவாகியுள்ளது.

உதவி செய்வதை கூட இப்படி நினைத்தால்... விஜய்க்கு அனுதாபங்கள்! வைகை செல்வன் பரபரப்பு ட்வீட்!

இந்த படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் சுற்றுப்பகுதியில் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios