விஜய் - அஜித் படங்களில் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் வாய்ப்பு! வெளிப்படையாக கூறிய பிரபல சீரியல் நடிகை!
விஜய், அஜித், கமல், உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மறுத்ததால் பட வாய்ப்புகள், கைநழுவியதாக சீரியல் நடிகை ஒருவர் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
சமீப காலமாகவே தென்னிந்திய திரையுலகில், மீடு மற்றும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்த பிரச்சனைகள் அதிகம் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக நடிகைகள் சிலர் தானாகவே முன்வந்து தாங்கள் எதிர்கொண்ட அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகளை வெளிப்படையாக தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் பல முன்னணி நடிகர்களுக்கு, தங்கையாகவும்... பிரபலமான சீரியல்களில் நடித்து பிரபலமான, நடிகை பாலாம்பிகா அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினை காரணமாக அஜித், விஜய், கமல், பிரசாந்த், போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க முடியாமல் போனதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை பாலாம்பிகா முரளிக்கு தங்கையாக 'பாலம்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து, 'நடிகன்' படத்தில் குஷ்புவுக்கு தங்கையாக, பாட்டுக்கு ஒரு தலைவன் என்கிற படத்தில், கேப்டன் விஜயகாந்த் தங்கையாக என பல முன்னணி நடிகர்களுக்கு தங்கையாக நடித்துள்ளார்.
இவர் பிரபல இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணனின் உதவியாளராக இருந்த, ராமசாமி என்பவரின் மகள் என்பதால் திரையுலகில் நுழையும் வாய்ப்பு மிகவும் எளிதாகவே கிடைத்தது. தங்கை போன்ற குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் போது, இவரிடம் யாரும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த பிரச்சனைகளை எழுப்பவில்லை என்றாலும்... கதாநாயகியாக நடிக்க பாலாம்பிகா வாய்ப்பு தேடிய போது, அஜித், விஜய், கமல், பிரசாந்த், உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்த போதிலும்... அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய மறுத்ததால் வந்த வேகத்தில், மற்றொரு நடிகைக்கு சென்றது.
தொடர்ந்து அட்ஜஸ்ட்மென் வாய்ப்புகளே வந்ததால், பாலாம்பிகாவின் தந்தை அப்படி தான் நீ நடிக்க வேண்டும் என்றால், நடிக்கவே வேண்டாம் எனக் கூறி தன்னுடைய மகளுக்கு திருமணத்தையும் நடத்தி வைத்துள்ளார். திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு விலகினார் பாலாம்பிகா. ஆனால் இவருடைய திருமண வாழ்க்கையும் நினைத்தது போல் அமையவில்லை.
குடிகார கணவருடன் வாழும் நிலை ஏற்பட்டது. எனினும் தன்னுடைய மகளுக்காக அவருடன் வாழ்ந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் தன்னுடைய மகளையே டாஸ்மார்கிற்கு அனுப்பி மது பாட்டில் வாங்கி வர அவருடைய கணவர் சொன்னதை அறிந்து, இனி அவருடன் வாழ்ந்தால் தன்னுடைய மகளுக்கு பாதுகாப்பு இல்லை என அவரை விட்டு ஒரேயடியாக பிரிந்தார் பாலாம்பிகா. தற்போது இவருடைய ஜீவனாம் சீரியல்கள் நடிப்பதன் மூலம் தான் நடந்து வருகிறது. நாதஸ்வரம், பிரியமானவள், உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் பாலாம்பிகா வில்லி கதாபாத்திரங்களில் நடித்த மிகவும் பிரபலமானார்.
காட்டிக்கொடுத்த பார்த்திபன்! பொன்னியின் செல்வன் இன்கம் ரெய்டு மேட்டரை கூறி பகீர் கிளப்பிய பயில்வான்!
எனினும் கொரோனா காலகட்டத்தில், ஒரு வேலை உணவுக்கு கூட வழி இல்லாமல் கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது நடிகர் சத்யராஜ் தனக்கு பண உதவி செய்ததாக கூறியுள்ள பாலாம்பிகா, ஒருவேளை விஜய், அஜித், கமல், பிரசாந்த், போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமல் வாய்ப்பு கிடைத்திருந்தால்.. நானும் முன்னணி நடிகையாக இருந்திருப்பேன் என கூறி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இவருடைய பேச்சு திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.