MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மகளுக்கு விரைவில் திருமணம்! 2-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள ரெடி.. பட் இது தான் பிரச்சனை? ரோபோ ஷங்கர் ஓபன் டாக்!

மகளுக்கு விரைவில் திருமணம்! 2-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள ரெடி.. பட் இது தான் பிரச்சனை? ரோபோ ஷங்கர் ஓபன் டாக்!

நடிகர் ரோபோ ஷங்கர், சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் இரண்டாவது குழந்தை பெற்று கொள்வதில் தனக்கு இருக்கும் பிரச்சனை குறித்து ஓப்பனாக பேசியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Jun 20 2023, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் என்ட்ரி கொடுத்து ஒரு காமெடி நடிகராக, ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் ரோபோ ஷங்கர். இவருடைய சின்னத்திரை பயணம் 'அசத்தப்போவது யாரு' என்கிற நிகழ்ச்சியின் மூலம் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக துவங்கியது. 
 

27

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சில படங்களில் சைடு ஆட்டிஸ்ட்டாக மட்டுமே நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். சிறந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் என்பதை தாண்டி, இவரை பிரபலமாகியது ரோபோ ஷங்கரின் மிக்கிரி திறமை தான். பல குரல் மன்னனான இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்தி, சிவாஜி கணேசன் போன்ற பல முன்னணி நடிகர்களின் குரல்களில் பேசி அசத்தும் திறமை கொண்டவர்.

சிவகார்த்திகேயன் மகன் இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே? பிள்ளையின் நடை அழகை வர்ணிக்கும் தந்தை! வைரல் புகைப்படம்!

37

விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ரோபோ ஷங்கர், ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி மூலம் நடன திறமையையும் வெளிப்படுத்தினார். பின்னர் மாரி படத்தின் மூலம் மெயின் காமெடி ரோலில் தனுஷுடன் நடித்து அசத்திய ரோபோ ஷங்கருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. அஜித்துடன் விஸ்வாசம், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன், தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான படத்தில் அவருக்கு நண்பனாகவும் நடித்திருந்தார்.

47

இடையில் திரைப்படத்திற்காக உடல் எடையை குறைக்க முயற்சி செய்த ரோபோ ஷங்கருக்கு, மஞ்சள் காமாலை வந்ததால் சாவின் விளிம்பிற்கே சென்று திரும்பியதாக உருக்கமாக பேசி இருந்தார். இந்நிலையில் இவர் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையை பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளது மட்டும் இன்றி, இதற்க்கு இடையில் இருக்கும் பிரச்சனை குறித்தும் பேசி இருந்தார்.

இந்தியன் 2 படக்குழுவினர் என்னை கொன்று விடுவார்கள்! பிறந்த நாள் அதுவுமா காஜல் சொன்ன வார்த்தை..!

57

வனிதா விஜயகுமார் தான் ரோபோ ஷங்கர் மற்றும் அவரின் மனைவியை பேட்டி எடுத்திருந்தார். அப்போது மஞ்சள் காமாலை வந்ததில் இருந்து, அதற்கான சிகிச்சை எடுக்க உதவியவர்கள் என அனைவரை பற்றியும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்து... நன்றி தெரிவித்திருப்பார் பிரியங்கா ரோபோ ஷங்கர்.

67

அந்த பேட்டியில் வனிதா இரண்டாவது குழந்தை பற்றி பேசுகையில், இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை இருக்கிறது. அதற்கு முயற்சி செய்து வருகிறேன்.... ஆனால், தான் இரவு நேரத்தில் ஷூட்டிங் சென்று விடுவதால் அதுக்கு வாய்ப்பில்லாமல் இருப்பதாக கூறியுள்ளார்.

விஜய் - அஜித் படங்களில் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் வாய்ப்பு! வெளிப்படையாக கூறிய பிரபல சீரியல் நடிகை!
 

77

ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுக்கு விரைவில் அவருடைய முறை மாமானோடு திருமணம் நடைபெற உள்ள நிலையில், இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை குறித்து, ரோபோ ஷங்கர் கூறியுள்ள தகவல் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தவறான எண்ணம்.. கையில் சிக்கிய வீடியோ! சுந்தரபாண்டியனுக்கு விஜி கொடுத்த மரண அடி - இன்றைய எபிசோட்!
Recommended image2
விவாகரத்து வழக்கில் திடீர் ட்விஸ்ட்.. மனைவியுடன் விஜய் சமரசம்? மனுவை திரும்ப பெறும் சங்கீதா? புது தகவல்!
Recommended image3
ராமாயணம் படத்தில் இணையும் கிறிஸ்டோபர் நோலன்.. ரூ.4,000 கோடி பட்ஜெட் படம்னா சும்மாவா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved