பிரபு தேவா மகளின் பெயர் இதுவா... குழந்தை பெயரை வைத்து நயன்தாரா வாழ்க்கையில் மீண்டும் விளையாடுகிறாரா மாஸ்டர்?
நடிகர் பிரபுதேவாவுக்கு, சமீபத்தில் பெண் குழந்தை பிறந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து தன்னுடைய செல்ல மகளுக்கு பிரபுதேவா, நயன்தாரா என பெயர் வைக்க முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளத்தில் சிலர் கொளுத்தி போட்ட தீ தான் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், நடன இயக்குனராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் பிரபுதேவா. இவருக்கு ஏற்கனவே கடந்த 1995 ஆம் ஆண்டு ரமலதா என்பவருடன் திருமணம் நடந்த நிலையில் பின்னர் விவாகரத்தில் முடிந்தது.
பிரபுதேவா - ரமலதா விவாகரத்துக்கு காரணம் நடிகை நயன்தாரா தான் என கூறப்படும் நிலையில்... மனைவியை விவாகரத்து செய்த பின்னர், நயன்தாரா - பிரபு தேவா இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். பிரபு தேவாவுக்காக நயன்தாரா மதம் மாறி திருமணம் வரை சென்ற நிலையில், திடீர் என ஏற்பட்ட கருத்து வேறுபாடால், இருவரும் பிரிந்தனர்.
இந்த நடிகை இயக்குனர் பாலாவின் அண்ணன் மகளா? நடிப்பை தொடர்ந்து தயாரிப்பில் இறங்கிய ரஞ்சனா நாச்சியார்!
காதல் முறிவுக்கு பின்னர், இருவரும் தங்களுடைய பணிகளில் கவனம் செலுத்த துவங்கினர். பிரபு தேவா கோலிவுட்டை விட பாலிவுட் படங்களை இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டினார். கொரோனா சமயத்தில் மும்பையிலேயே இருந்த பிரபு தேவா, முதுகு வலிக்காக பிசியோதெரபிஸ்ட்டான ஹிமாலினி சிங்கிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டபோது, இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி பின்னர் திருமணத்திலும் முடிந்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டு தன்னுடைய குடும்பத்தினர் முன்னிலையில் மிகவும் எளிமையாக பிரபு தேவா ஹிமானி சிங்கை திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் கூட பல மாதங்களுக்கு பின்பு தான் வெளியே வந்தது. பிரபு தேவா - ஹிமானி சிங்கிற்கு திருமணம் ஆகி, 3 வருடங்கள் ஆகும் நிலையில்... இந்த ஆண்டு, துவக்கத்தில் பிரபு தேவாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பிரபு தேவா குடும்பத்திலேயே முதல் பெண் குழந்தை பிறந்துள்ளதால், குடும்பத்தினர் அனைவருமே மிகவும் சந்தோஷமாக உள்ளதாகவும் தகவல் வெளியானது.
பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் தான் மனைவி ஹிமானி சிங்குடன் பிரபு தேவா திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்ததாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் புயலை கிளப்புவது போல் ஒரு வதந்தி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதாவது பிரபு தேவா தன்னுடைய மகளுக்கு நயன்தாரா என பெயர் வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படும் தகவல் தான் அது. யாரோ சிலர் கொளுத்தி போட்ட இந்த தீ யூடியூப் மற்றும் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தாலும், அதற்க்கு வாய்ப்பே இல்லை என கூறி வருகிறார்கள், பிரபு தேவாவுக்கு நெருக்கமான சில நண்பர்கள்.
குழந்தை பிறந்த விஷயத்தை சஸ்பென்சாக வைத்திருந்த பிரபு தேவா, குழந்தை பெயரை வைத்து இப்படி ஒரு வதந்தி பரவுவதால், இதற்க்கு முற்று புள்ளி வைப்பது போல்... செல்ல மகளின் பெயரை வெளியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.