கமலுக்காக சட்டைய கிழிச்சுட்டு சண்டைக்கு போவேன்... ஓப்பனாக சொன்ன லோகேஷ் கனகராஜ் - வெறித்தனமான ரசிகரா இருக்காரே!
கமலின் தீவிர ரசிகன் என்கிற இடத்தை தான் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விருது விழா ஒன்றில் பேசி உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் தொடங்கிய இவரது பயணம் அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர் என்கிற அந்தஸ்தையும் பெற்று தந்துள்ளது. குறிப்பாக லோகேஷ் கனகராஜின் கால்ஷீட்டுக்காக கோலிவுட் முதல் பாலிவுட் வரை முன்னணி நடிகர்கள் காத்திருக்கும் நிலை தான் தற்போது உள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியதில்லை. பின்னர் எப்படி இந்த மாதிரி தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுக்கிறார் என்று கேட்டால், தான் ஒரு தீவிரமான கமல் ரசிகன், அவரது படங்களை பார்த்து பார்த்து தான் நான் சினிமாவையே கற்றுக்கொண்டேன் என பல மேடைகளில் கூறி இருக்கிறார் லோகேஷ். அந்த அளவுக்கு தீவிர ரசிகனான இவர், கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். ஒரு ரசிகனாக அப்படத்தை பார்த்து பார்த்து செதுக்கி கமலின் கெரியரிலே அதிக வசூலை வாரிக்குவித்த படம் என்கிற பெருமையையும் பெற்றுத் தந்தார் லோகேஷ்.
இதையும் படியுங்கள்... இம்முறையும் தஞ்சாவூர் பக்கம் தலைகாட்டப் போவதில்லை... புரமோஷன் டூர் பிளானை வெளியிட்ட பொன்னியின் செல்வன் டீம்
இந்த அளவு தீவிர ரசிகனாக இருக்கும் லோகேஷ், சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது ஜெய் பீம் மணிகண்டன், கமல்ஹாசன் கையால் விருது வாங்கிவிட்டு பேசும்போது, லோகேஷ் எப்போதும் தான் ஒரு தீவிரமான கமல் ரசிகன் என சொல்லும் போது தனக்கு கோவம் வந்து அவரை அடிக்கலாம் போல தோணும், ஏன்னா அந்த பட்டம் என்னுடையது. சாரி லோகேஷ் இதை நான் எந்த சமயத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என பேசி இருந்தார்.
மணிகண்டனின் பேச்சைக் கேட்டு சிரித்த லோகேஷ் கனகராஜ், பின்னர் மேடை ஏறி அவருக்கு பதிலடியும் கொடுத்துள்ளார். அது என்னவென்றால், ஒரு மணிகண்டன் இல்ல இன்னும் 100 மணிகண்டன் வந்தாலும் சட்டைய கிழிச்சுட்டு சண்டைக்கு போவேன். அந்த இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன். கமல் சாரைப் பத்தி நான் தான் நிறைய பேசுவேன் என சொல்லி அரங்கையே அதிர வைத்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதென்னப்பா லோகேஷ் இவ்ளோ வெறித்தனமான கமல் ரசிகரா இருக்காரே என வியந்து பேசி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Watch : திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆன ஜிபி முத்து... தலைவருக்கு என்னாச்சு?