Asianet News TamilAsianet News Tamil

திரையரங்கில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த தசரா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஒடேலா ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன தசரா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

keerthy suresh and Nani starrer Dasara movie OTT release date announced
Author
First Published Apr 21, 2023, 3:32 PM IST

தெலுங்கில் ரங்கஸ்தலம், புஷ்பா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் சுகுமார். அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒடேலா ஸ்ரீகாந்த் என்பவர் இயக்கிய முதல் திரைப்படம் தசரா. பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரான இப்படத்தில் நானி ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.

தசரா திரைப்படம் கடந்த மார்ச் 29-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழில் வெற்றிமாறனின் விடுதலை மற்றும் சிம்புவின் பத்து தல ஆகிய படங்களுக்கு போட்டியாக ரிலீஸ் ஆன இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதையும் படியுங்கள்... தெரிஞ்சவங்களே திருடிட்டாங்க.. 'பொன்னியின் செல்வன்' பட நடிகை வீட்டில் நடந்த திருட்டு! ஷாக்கிங் பதிவு.!

அதுமட்டுமின்றி வசூலிலும் தசரா திரைப்படம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது. அதன்படி ரிலீசான ஒரே வாரத்தில் இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தசரா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை கொண்டாடும் விதமாக அப்படத்தின் இயக்குனருக்கு பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை தயாரிப்பாளர் பரிசாக வழங்கினார்.

இந்நிலையில், திரையரங்குகளில் சக்கைப்போடு போட்ட தசரா திரைப்படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஏப்ரல் 27-ந் தேதி ஓடிடியில் ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்... PS2 புரமோஷனுக்காக விக்ரம் கட்டி வந்த காஸ்ட்லி வாட்ச்.... சிம்பிளா தான இருக்கு அதன் மதிப்பு இத்தனை லட்சமா..!

Follow Us:
Download App:
  • android
  • ios