PS2 புரமோஷனுக்காக விக்ரம் கட்டி வந்த காஸ்ட்லி வாட்ச்.... சிம்பிளா தான இருக்கு அதன் மதிப்பு இத்தனை லட்சமா..!
பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷனுக்காக நடிகர் சீயான் விக்ரம் அணிந்து வந்த காஸ்ட்லி வாட்ச் குறித்தும், அதன் மதிப்பு குறித்தும் தற்போது பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவரது மகனே ஹீரோவாக நடிக்க வந்துவிட்ட போதிலும் மகனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இன்னும் இளமை குறையாமல் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார் விக்ரம். இவர் கைவசம் தற்போது தங்கலான் மற்றும் பொன்னியின் செல்வன் 2 ஆகிய திரைப்படங்கள் உள்ளன. இதில் பொன்னியின் செல்வன் 2 ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. வருகிற ஏப்ரல் 28-ந் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது.
மறுபுறம் தங்கலான் திரைப்படமும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. பா.இரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தங்கலான் படத்துக்காக நடிகர் விக்ரம் உடல் எடையை குறைத்து மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் விக்ரம் பிறந்தநாளுக்கு இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி மிரள வைத்தது. 57 வயதிலும் நடிகர் விக்ரமின் கடின உழைப்பை பார்த்து அனைவரும் பிரம்மித்துப்போயினர். அந்த அளவுக்கு இப்படத்திற்காக கடினமாக உழைத்து வருகிறார் விக்ரம்.
இதையும் படியுங்கள்.. சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே...! கார்ஜியஸ் லுக்கில் கவர்ந்திழுக்கும் ரம்யா பாண்டியன் - வைரலாகும் போட்டோஸ்
தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டதால், அதற்கான புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார் விக்ரம். இது பான் இந்தியா படமாக ரிலீஸாக உள்ளதால் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொன்னியின் செல்வன் படத்தை புரமோட் செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்ரம், அப்போது போட்டோஷூட் ஒன்றையும் நடத்தினார்.
ப்ளூ கலர் பேண்ட் மற்றும் ஷர்ட் அணிந்து மாஸான லுக்கில் அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. அந்த போட்டோஷூட்டில் அவர் கையில் ஹியூப்லோட் என்கிற நிறுவனத்தின் வாட்ச்சையும் அணிந்திருந்தார். அந்த வாட்ச்சின் விலை தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சுவிட்சர்லாந்தின் ஹியூப்லோட் என்கிற பிராண்ட் வாட்ச் தான் அது. big bang meca-10 என்கிற வெர்ஷனை சேர்ந்த இந்த வாட்ச்சின் விலை இந்திய மதிப்பில் சுமார் 21 லட்சத்து 29 ஆயிரத்து 700 ரூபாயாம். இதைப்பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்கள் பார்க்க சிம்பிளா இருக்கு இதுக்கு இவ்வளவு விலையா என ஆச்சர்யத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்.. தெரிஞ்சவங்களே திருடிட்டாங்க.. 'பொன்னியின் செல்வன்' பட நடிகை வீட்டில் நடந்த திருட்டு! ஷாக்கிங் பதிவு.!