சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே...! கார்ஜியஸ் லுக்கில் கவர்ந்திழுக்கும் ரம்யா பாண்டியன் - வைரலாகும் போட்டோஸ்
நடிகை ரம்யா பாண்டியன் சுடிதார் அணிந்து நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் ரம்யா பாண்டியன். தற்போது பல்வேறு இளம் நடிகைகள் ரசிகர்களை கவர்ந்திழுக்க பயன்படுத்தி வரும் யுக்தியாகவும் இந்த மொட்டைமாடி போட்டோஷூட் மாறி உள்ளது. அதற்கு விதை போட்டது ரம்யா பாண்டியன் தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மொட்டை மாடியில் அவர் கவர்ச்சியாக நடத்திய போட்டோஷூட் தான் அவரை இந்த அளவுக்கு பேமஸ் ஆக்கியது.
இதன்பின் பிக்பாஸ் வாய்ப்பு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் சினிமாபட வாய்ப்புகள் என அடுத்தடுத்து ரம்யா பாண்டியனுக்கு சான்ஸ் கிடைத்து இன்று செம்ம பிஸியான நடிகையாக அவர் வலம் வந்தாலும், போட்டோஷூட் நடத்துவதை கைவிடாமல் அவ்வப்போது விதவிதமான ஆடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை செம்ம குஷியாக்கி வருகிறார் ரம்யா பாண்டியன்.
இதையும் படியுங்கள்... Yaathisai Review : சோழர்களைப் போல் பிரம்மிக்க வைத்தார்களா பாண்டியர்கள்? - யாத்திசை படத்தின் விமர்சனம் இதோ
அந்த வகையில் தற்போது சுடிதார் அணிந்து அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் சேலையைப் போல் சுடிதாரிலும் நீங்க செம்ம அழகாக இருக்கிறீர்கள் எனவும், தொடர்ந்து இதுபோன்று போட்டோஷூட் நடத்துமாறும் ரம்யா பாண்டியனுக்கு அன்புக்கட்டளை போட்டு வருகின்றனர்.
சிலரோ அவரை தேவதைபோல் மிகவும் அழகாக இருப்பதாகவும் வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகை ரம்யா பாண்டியன் சந்தன நிற சுடிதார் அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்தபடி நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. தற்போது டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என எந்தபக்கம் சென்றாலும் அதில் ரம்யா பாண்டியனின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் தான் செம்ம வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ரஜினிக்கு பயம்காட்டிய ஆக்ஸ்ட் செண்டிமெண்ட்... அதிரடியாக ஜெயிலர் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதன் பின்னணி இதுதானா..!