Asianet News TamilAsianet News Tamil

தெரிஞ்சவங்களே திருடிட்டாங்க.. 'பொன்னியின் செல்வன்' பட நடிகை வீட்டில் நடந்த திருட்டு! ஷாக்கிங் பதிவு.!

சமீபத்தில், நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில்... நடந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதை தொடர்ந்து... பொன்னியின் செல்வன் பட நடிகை தன்னுடைய வீட்டில் இருவர் திருடிய சம்பவம் குறித்து ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளார்.
 

ponniyin selvan actress vinothini about theft in her house
Author
First Published Apr 21, 2023, 2:59 PM IST

மேடை நாடக கலைஞரான வினோதினி, வைத்தியநாதன் கடந்த 2009 ஆம் ஆண்டு, வெளியான காஞ்சிவரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து, எங்கேயும் எப்போதும், கடல், ஜில்லா, வானம், பொன்னியின் செல்வன் என ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் படங்களை தொடர்ந்து, தெலுங்கு படங்களிலும், பாவக்கதைகள் போன்ற வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். 

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை உள்வாங்கிக்கொண்டு, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும், வினோதினி... தன்னுடைய வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வினோதினி கூறியுள்ளதாவது... "சென்ற வாரம் என்னிடமிருந்து 2 நபர்கள் மொத்தம் 25000 ரூ திருடிவிட்டனர். (தனித்தனியே நடந்த இரு சம்பவங்கள்). இருவர் மீதும் போலீஸ் கம்ப்ளையிண்ட் தரப்பட்டு இந்த வாரத்திற்குள் பணத்தைத் திரும்பத் தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை. அவர்கள் இருவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இல்லையென்றாலும், ஒரு வகையான அன்னாடங்காச்சிகள் தான். ஒருவர் வீட்டு painter. மற்றொருவர் mechanic. தேவைக்காக பணம் திருடிவிட்டனர். CCTV footage இருந்ததால் ஒருவர் ஒப்புக்கொண்டார். மனைவியின் நம்பருக்கு அழைத்து கழுவி ஊத்தியதாலும் அந்த மனைவியுடன் இவர் இப்பொழுது வாழாததாலும் மற்றொருவர் ஒப்புக்கொண்டார். இருவரும் நன்றாக வேலை செய்யக்கூடியவர்கள். In fact, அந்த மெக்கானிக்கை எங்களுக்கு பல வருடங்களாகத்தெரியும். அந்த painter தனியாக project வாங்கியும், Urban Company என்ற corporateஇலும் contract வேலைப் பார்க்கிறவர்.

சாதாரணமாக, இப்படிப்பட்டவர்கள் உழைத்து சாப்பிடவே நினைப்பார்கள். Lower to middle classஇல் இருக்கும் இதுபோன்றவர்கள் தங்களது குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் பல aspirationsஓடு வாழ்வர். தனது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த கடுமையாக உழைப்பார்கள். பின் இவர்களை (அதாவது களவுக்குப் பரிச்சயமில்லாதவர்களை) எது திருடத்தூண்டுகிறது? இன்றைய காலகட்டமும், நாம் வாழும் சமூகச்சூழலும்தானே.

Demonetisation, GST, state taxes, inflation, petrol hike, electricity hike, low quality of goods, increasing divide between rich and poor, high interest rates என்று பொது மக்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஏழைக்குடும்பத்திற்கு கூட சென்னை போன்ற metroவில் மாதம் 20-25000 ரூ தேவைப்படுகிறது. இதில் அதிக நேர வேலை, traffic, அதனால் ஏற்படும் உடல் மற்றும் மனக்கோளாறுகள், சம்பளங்கள் சரியான நேரத்திற்கு வராத பிரச்சனைகள், corporateகளுடைய vendorகளாக வேலை செய்யும் delivery boys/ executivesஉடைய உழைப்பைச்சுரண்டி commission போக அவர்களுக்கு பிச்சைப்போடுவதுபோல் சம்பளம் தரும் போக்கு என இன்னும் காரணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இனிவரும் காலங்களில் மனிதனை மனிதன் வயிற்றுப்பசிக்காக அடித்துக்கொல்லும் வாய்ப்பும் உள்ளது. அப்படி நடந்தால் அதில் ஒரே நல்ல விஷயம் - அப்பொழுதாவது, சாதி மதம் ஒழிந்து அடுத்த வேளை சாப்பாடு/தண்ணி/காற்று உள்ளவன் - இல்லாதவன் என்ற இரண்டே பிரிவுகளாக நிற்போம்... என உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios