மேடை நாடகங்களில், ஈடு இணையில்லா தன்னுடைய காமெடி பேச்சாலும் நடிப்பாலும் , பல லட்ச ரசிகர்களை சிரிக்க வைத்தவர் கிரேஸி  மோகன். தமிழ் திரையுலகில் பல படங்களுக்கு வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் மரணமடைந்ததை அறிந்த தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா,  கிரேஸி மோகன் என்ற பெயருக்கு பதிலாக லூஸ் மோகன் என்று பதிவிட்டார்.  இதனால் அவரது  தவறை சுட்டிக்காட்டியவர்களுக்கு நன்றி என முகநூல் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

பிரபல நாடகக் கலைஞரும்,  நடிகருமான கிரேசி மோகன் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று பிற்பகல் 2 மணியளவில் மரணம் அடைந்தார்.  இவரின் மறைவை அறிந்த தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, கிரேஸி மோகன் என்று பெயரை முக நூலில் பதிவிடுவதற்கு பதிலாக  "திரு.லூஸ் மோகனின் மறைவு நாடக உலகத்தின் வெற்றிடமே என்று பதிவு ஒன்றை போட்டார்". 

கஸ்தூரி ராஜா, கிரேஸி மோகன் என்பதற்கு பதிலாக லூஸ்மோகன் என்று  பதிவிட்டதை அறிந்த நெட்டிசன்கள் சிலர், அவரது தவறை சுட்டிக் காட்டினர்.  இதைத்தொடர்ந்து தன்னுடைய தவறை புரிந்து கொண்ட கஸ்தூரிராஜா "கிரேஸி மோகன் அவர்கள் மறைவு நாடக உலகின் வெற்றிடமே என பதிவிட்டார்".

 

மேலும் "தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் நேற்று தவறுதலாக லூஸ் மோகன் என்று பதிவிட்டு விட்டேன்,  தவறை சுட்டிக்காட்டி உணர்த்திய சகோதரருக்கு பணிவான நன்றி என தெரிவித்துள்ளார்.