சாரு ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுக்களை பெற்ற திரைப்படம் தாதா 87.  இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவது குறித்து படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தில் லோக்கல் தாதாவாக கலக்கிய சாரு ஹாசன், இந்த படத்திலும் தாதாவாக தான் களம் இறங்க உள்ளார். 

 

இதையும் படிங்க: “அது கல்யாணமே இல்ல”... உண்மையை ஓபனாக போட்டுடைத்த வனிதா வக்கீல்...!

முதல் பாகத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ, சாரு ஹாசனை வைத்து தாதா 87 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். கொரோனா லாக்டவுனுக்கு முன்பே இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. 7 நாட்கள் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியாகியுள்ள புகைப்படங்கள் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்ப போகிறது என இப்போதே கோலிவுட்டில் கிசு, கிசுக்க ஆரம்பித்துவிட்டனர். 

 

இதையும் படிங்க:  கண்டவன் எல்லாம் கலாய்க்கும் நிலைக்கு கணவரால் தள்ளப்பட்ட சமந்தா... வைரலாகும் இதை பார்த்தால் புரிஞ்சுக்குவீங்க!

சிவசேனா கட்சியின் நிறுவனரான மறைந்த பால் தாக்கரே தோற்றத்தில் வெளியாகியுள்ளது. படத்தில் இந்து மதத்தையோ, இந்துக்களையோ கொஞ்சம் கொச்சைப்படுத்திவிட்டால் கூட சிவசேனா கட்சியினர் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு முதலில் எழும் குரல் அவர்களுடையதாகவே இருக்கும். இந்நிலையில் அக்கட்சியின் நிறுவனரான பால் தாக்கரே தோற்றத்தை ஒத்த படி வெளியாகியுள்ள சாரு ஹாசனின் புகைப்படங்கள் கண்டிப்பாக சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இதையும் படிங்க: வனிதா - பீட்டர் பால் அடுத்த முத்த லீலை... செய்யுறதை எல்லாம் செஞ்சிட்டு விளக்கம் வேற....!

உள்ளூரில் சாதாரண தாதாவாக இருக்கும் ஒருவர் தன் புத்தியின் பலத்தை கொண்டு உலக அரங்கில் தவிர்க்க முடியாத இடத்தை எவ்வாறு பிடித்து முதன்மை இடத்தை அடைகிறார் என்ற பின்னணியில் படம் உருவாக்கப்படுகிறதாம். கொரோனா நேரத்தில் ப்ரீ பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதற்காக படக்குழு வெளியிட்டுள்ள புகைப்படங்கள், படத்தையே மிகப்பெரிய சிக்கலில் மாட்டிவிடாமல் இருந்தால் சரி.