தற்போது சோசியல் மீடியாவில் பேசு பொருளாக மாறியுள்ளது பீட்டர் பாலுடனான வனிதாவின் 3வது திருமணம். முறையாக விவகாரத்து பெறாமல் தன்னையும், தனது பிள்ளைகளையும் தவிக்கவிட்டு பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக அவருடைய முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி பீட்டர் பாலுக்கு வேலை இல்லை, அவர் ஒரு குடிகாரர், பெண்கள் பின்னால் சுற்றுபவர் என்பது போல் எல்லாம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

 

இதையும் படிங்க:  ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் செம்ம கிளாமர்... 49 வயசிலும் கவர்ச்சியில் குறை வைக்காத ரம்யா கிருஷ்ணன்...!

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூட, வனிதா - பீட்டர் பால் இடையே நடந்தது திருமணம் இல்லை என்றால் ஏன் வனிதாவின் வக்கீல் அங்கு வந்தார் என கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் வனிதாவின் வக்கீலான ஸ்ரீதர் ஆன்லைன் தளத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், பீட்டர் பால் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நண்பர் என்ற முறையில் திருமணத்தில் பங்கேற்றேன் எனக்கூறியுள்ளார். 

 

இதையும் படிங்க: “பயங்கரமான குடிகாரர் பீட்டர் பால்”... முகத்திரையை கிழிக்கும் முதல் மனைவி...!

மேலும் பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்றால் இதை திருமணமாக நீ நினைக்காதே. ஒரு நிச்சயதார்த்தம் போல் வைத்துக்கொள்ளுங்கள் என வனிதாவிடம் கூறினேன். கிறிஸ்துவ முறைப்படி நடத்தப்படும் திருமணத்தை நீங்கள் சாதாரணமாக வீட்டில் நடத்த முடியாது. குறைந்தபட்சம் அந்த திருமணத்தை நடத்த பாஸ்டர் வேண்டும். திருச்சபையில் 3 முறை அறிவிக்க வேண்டும். அதற்கு யாராவது மறுப்பு தெரிவிக்கவில்லை என்றால் மட்டுமே ஒப்புதல் கிடைக்கும். முதலில் வனிதா ஒரு இந்து, அவர் மதம் மாற வேண்டும். பீட்டர் பால் இந்து மதத்திற்கு மாறவே முடியாது. இதையெல்லாம் தாண்டி இவர்கள் ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட் படி திருமணம் செய்ய வேண்டும் என்றாலும் 15 நாட்கள் கால அவகாசம் தேவைப்படும். 

 

இதையும் படிங்க: பிரபல தொகுப்பாளினி டிடி-யை ஓங்கி அறைந்த தீனா... வைரல் வீடியோவால் டென்ஷனான ரசிகர்கள்...!

எனக்கு தெரிந்து அங்கு நடந்தது திருமணம் அல்ல. சும்மா இரண்டு பேரும் மோதிரம் மாத்திக்கிட்டாங்க அவ்வளவு தான். அது ஒரு நிச்சயதார்த்தம் அவ்வளவு தான். ஒரு லாயராக நான் அதை திருமணம் என்று சொல்ல மாட்டேன். இருமனங்கள் இணைந்த ஒரு நாள் என்று கூட நீங்கள் நினைத்துக்கொள்ளலாம் என விளக்கமளித்துள்ளார்.