பிரபல நடிகை வனிதா விஜய்குமாருக்கும் விஷ்வல் எடிட்டர் பீட்டர் பாலுக்கும் கடந்த 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணமாகும், தனது இரண்டு மகள்கள் முன்னிலையில் பீட்டரை வனிதா கரம் பிடித்தார். கடந்த 7 ஆண்டுகளாக பீட்டர் பாலை பிரிந்து வாழ்ந்து வரும் அவருடைய முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போர்க்கெடி தூக்கியுள்ளார். முறையாக விவகாரத்து பெறாமல் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், வனிதா தன் கணவரை அபகரித்து கொண்டதாக ஆன்லைன் மீடியாக்களில் பேட்டி கொடுத்து வருகிறார். 

சில நாட்களுக்கு முன்பு கூட பேட்டி ஒன்றில் பேசிய ஹெலன், என் கணவரை வீட்டிற்குள்ளேயே வைத்து வனிதா காரியம் சாதித்து கொண்டார். எனக்கு விவாகரத்து கொடுப்பதில் விருப்பம் இல்லை. பீட்டர் பால் ஒரு குடிகாரர், பெண்கள் விவகாரத்திலும் அடிக்கடி சிக்கிக் கொள்ளவார். என்ன இருந்தாலும் கணவர் என்பதால் அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன். எங்களை சேர்ந்தவர்கள் எல்லாரும் போன் செய்து விசாரிக்கின்றனர்,. என்ன உங்க கணவர் வேறு திருமணம் செய்து கொண்டாராமே? என விசாரிக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. எனக்கு எனது கணவருடன் சேர்ந்து வாழவே விருப்பம் என தெரிவித்துள்ளார். மேலும் பீட்டர் பாலுக்கு தற்போது வருமானம் ஏதுமில்லாததால், வனிதா போன்ற நடிகையுடன் செட்டில் ஆகிவிட்டால் அவர் சொல்லும் வேலையை செய்து கொண்டு காலம் தள்ள பிளான் போட்டுள்ளார். அதனால் தான் பீட்டர் பால் பத்தோட பதினொன்னாக வனிதாவை திருமணம் செய்துள்ளார் என சகட்டுமேனிக்கு கிழித்தெடுத்துள்ளார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது யூ-டியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்ட வனிதா, பீட்டர் பால் மிகவும் நல்லவர் என்றும். அவர் குடிக்கவே மாட்டார், பொம்பள பொறுக்கி என அபாண்டமாக ஹெலன் குற்றச்சாட்டுகிறார். கணவருடன் வேண்டும் என்று பேசும் எந்த பெண்ணாவது இப்படி எல்லாம் மீடியாவில் பேசுவாங்களா?...  கல்யாணத்தன்று கூட ஆல்கஹால் இல்லாத ஒயிட் ஒயினை தான் பீட்டர் பால் குடித்தார். அதற்கான வீடியோ ஆதாரம் கூட என்னிடம் உள்ளது என அதையும் வனிதா வெளியிட்டார். மேலும் தங்களுக்குள் நடந்தது லவ்  எக்ஸ்சேஞ்ச், எங்களுடைய காதலை பரிமாறிக்கொண்டோம் என்றும், சட்டப்படியாக எதையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் ஹெலனுக்கு சவால் விட்டார்.

 

இதையும் படிங்க: ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் செம்ம கிளாமர்... 49 வயசிலும் கவர்ச்சியில் குறை வைக்காத ரம்யா கிருஷ்ணன்...!

இந்நிலையில் எலிசபெத் ஹெலனின் பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பீட்டர் பாலையும், வனிதாவையும் கிழி, கிழியென கிழித்தெடுத்துள்ளார். அதாவது பீட்டர் பால் நீண்ட நாட்களாகவே குடிக்கு அடிமையாக இருந்ததாகவும், அதற்காக அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்த்திருந்த போது கீழே விழுந்து உடல் முழுவதும் நிறைய காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் பீட்டர் பாலின் சட்டையை கழட்டி பார்த்தால் அந்த தழும்புகள் இன்னும் இருக்கும் என்றும், அப்போது நான் சொல்வது உண்மையென நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

 

இதையும் படிங்க:  படுக்கையறையில் கணவருக்கு லிப்லாக்... முத்த போட்டோவிற்கு புதுவித விளக்கம் கொடுத்த வனிதா...!

அதுமட்டுமின்றி பீட்டர் பால் அம்மா, அண்ணன் என யாருமே திருமணத்திற்கு ஏன் வரவில்லை?. அவர்களுக்கு கூட பீட்டர் பால் - வனிதாவின் திருமண விவகாரம் பிடிக்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். லவ் எக்ஸ்செஞ்ச் என்று சொல்லும் வனிதா, ஏன் எங்கள் கிறிஸ்துவ முறைப்படி மோதிரம் மாற்றிக்கொண்டார்கள்?. வக்கீல் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என பலரையும் ஏன் அன்று அழைத்தார்கள்? என அடுக்கடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.