இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் படப்பிடிப்பில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் தங்களது முந்தைய ஒப்பந்தங்களை முடித்த கையோடு இணைவார்கள் என தெரிகிறது. 

பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி முக்கிய இடத்தில் நடித்து முடித்துள்ளார். அதோடு இவர் கைவசம் அகிலன் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இந்நிலையில் ஜெயம் ரவியின் புதிய படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கதாநாயகன், விசுவாசம் உள்ளிட்ட படங்களின் எழுத்தாளராக பணியாற்றிய ஆண்டனி பாக்கியராஜ் விரைவில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

 இந்த புதிய படத்திற்காக ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரையும் இயக்குனர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து விட்டார். படத்தின் அறிவிப்பு குறித்த சமீபத்திய வீடியோ ஒன்றை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும் 29ஆம் தேதி படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு... Diary Twitter Review : அருள்நிதியின் டைரி..இந்த முறை ரசிகர்களின் மனதை வென்றாரா ? நாயகன்..டிவிட்டர் ரிவ்யூ இதோ

Scroll to load tweet…

மேலும் செய்திகளுக்கு...சிவப்பு வண்ண இரட்டை பிட்டுகளை உடலில் சுற்றி கலங்கடிக்கும் விஜய் பட நாயகி

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் படப்பிடிப்பில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் தங்களது முந்தைய ஒப்பந்தங்களை முடித்த கையோடு இணைவார்கள் என தெரிகிறது. முன்னதாக சாணிக் காகிதம் படத்தில் காக்கி உடையில் தோன்றிய கீர்த்தி சுரேஷ் இந்த படத்திலும் போலீஸ் வேடத்தில் தோன்றுவார் என தெரிகிறது.

மேலும் செய்திகளுக்கு...International Dog Day : சமந்தா முதல் ராஷ்மிகா மந்தனா வரை..நாய் பிரியர்களாக இருக்கும் பிரபலங்களின் பட்டியல் இதோ

படத்தின் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. ஜெயம் ரவியின் பொன்னியின் செல்வன், அகிலன் ஆகிய படங்களோடு தனது 30வது படப்பிடிப்பில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளார். இந்த படத்தை எம் ராஜேஷ் இயக்குகிறார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளார். அதேபோல கீர்த்தி சுரேஷ் தமிழில் மாமன்னன் மற்றும் தெலுங்கில் தசரா படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இவரது நடிப்பில் மேலும் இரண்டு படங்கள் தயாரிப்பில் உள்ளன.