இன்றைய பிரபலங்கள் பலரும் தனது ஆத்ம நண்பராக நினைப்பது தங்களது செல்லப் பிராணிகளை தான் அதிலும் நாய்களுக்கு அதிக இடம் உண்டு. படுக்கை அறை வரை செல்லக்கூடிய நண்பர்களான இவர்கள் மீது  பிரபலங்கள் பலரும் தங்கள் அன்பை பொலிவது குறித்தான பதிவு வைரலாவது வழக்கம்.  இவர்களுக்கு என தனி நாளே கொண்டாடப்படுகிறது. சர்வதேச நாய் தினம் என பெயரிடப்பட்டுள்ள கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாய் பிரியர்கள் குறித்த தற்போது காணலாம்.

கணவரைப் பிரிந்த சமந்தாவிற்கு ஆறுதல் தருபவர்கள் அவர் வளர்க்கும் செல்ல நாய்களாகவே இருக்கிறது. இதை தனது பல பதிவுகளிலும் பதிவிட்டுள்ளார் சமந்தா. அதோடு தனது செல்லப் பிராணியின் பெயரை மோதிரமாக செய்து தன் கையிலும் அணிந்துள்ளார்.

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு...Huma Qureshi Valimai : உடல் எடையை குறைத்த பின் டெட்டி போஸ்களால் இன்ஸ்டாவை நிரப்பும் வலிமை நாயகி

பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவரின் செல்லப்பிராணிகளாக மூன்று நாய்கள் உள்ளன டயானா ஜூனோ மற்றும் பாண்டா என அவர்களுக்கு பேயரிடப்பட்டுள்ளது. அவ்வப்போது நாய்களுடன் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வர்.

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு...விறுவிறுக்கும் ‘பிக்பாஸ் சீசன் 6’ பணிகள்.. இதுவரை 10 போட்டியாளர்களை தட்டி தூக்கிய பிக்பாஸ் குழு- அவர்கள் யார்?

மற்றொரு பாலிவுட் பிரபலமான வருண் தவான் அவரது செல்லப்பிராணி பற்றி பேசாமல் இருந்ததே இல்லை. முந்தைய பதிவில் உங்களால் நான் கொஞ்சம் குறைவாக அழுகிறேன், மேலும் அதிகமாக சிரிக்கிறேன் என்று எழுதுயிருந்தார்.

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு...Selvaraghavan's Bakasuran First Look : பகாசூரனாக செல்வராகவன்... வெளியானது முதல் பார்வை ...

வாரிசு பட நாயகி ரஷ்மிகா மந்தனா தனது செல்லப்பிராணியுடன் அழுத்தமான அன்பை வெளிப்படுத்துகிறார். முன்னதாக தன நாய்க்கு விமான டிக்கெட் போட்டால் தான் படப்பிடிப்புக்கு வருவேன் என ராஸ்மிகா கூறியதாக ஒரு வதந்தியம் பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

View post on Instagram

கவர்ச்சி நாயகியான மலைக்கா அரோரா தனது செல்லப் பிராணியான காஸ்பருடன் அடிக்கடி நகரங்களில் சுற்றித்திரிவதை காண முடிகிறது.

View post on Instagram