மும்முறை தேசிய விருது பெற்ற சங்கர் மகாதேவன்.. அவரையே திக்குமுக்காட வைத்த ஹங்கேரி பாடகர்!
"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" படத்தில் வந்த "என்ன சொல்லப் போகிறாய்" என்ற பாடலுக்காகத் தான் இவருக்கு முதல் முதலில் தேசிய விருது கிடைத்தது.

தமிழ் திரையுலகில் உள்ள பல சூப்பர் ஹிட் பாடகர்களில் மிக முக்கியமானவர் சங்கர் மகாதேவன். இவர் இதுவரை மூன்று முறை தேசிய விருது வென்று அசத்தியுள்ளார். முதல் முதலில் இவர் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளை பாடி தான் தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" படத்தில் வந்த "என்ன சொல்லப் போகிறாய்" என்ற பாடலுக்காகத் தான் இவருக்கு முதல் முதலில் தேசிய விருது கிடைத்தது. சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
இதையும் படியுங்கள் : பிக்பாஸ் பாவனிக்கு என்ன ஆச்சு? திடீர் என நடந்த அறுவை சிகிச்சை.!
இதுமட்டுமல்லாமல் கடந்த 2019ம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் பலவற்றுள் ஒரு சூப்பர் ஹிட் சிங்கராக விளங்கி வரும் இவரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு ஹோட்டல் மேனேஜர்.
இது குறித்து சங்கர் மகாதேவன் தனது Instagram பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியது பின்வருமாறு "நான் இப்பொழுது ஹங்கேரி நாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் இருக்கின்றேன், இந்த ஹோட்டலின் மேனேஜர் திருச்சி சங்கரன் அய்யாவின் மாணவன். (திருச்சி சங்கரன் ஒரு மாபெரும் இசைக்கலைஞர் ஆவார்) அவரிடம் பாடம் பயின்றவர் தான் தற்பொழுது ஹங்கேரி நாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.
பிறகு சங்கர் மகாதேவன் அவரை சில வரிகள் பாட சொல்லும் பொழுது, அந்த ஹோட்டல் மேனேஜர் அவ்வளவு அழகாக ஜதிகளை பாடி அவரை அசத்தினார். இசைக்கு மொழி இல்லை என்பதை இவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் என்று பெருமிதத்தோடு கூறினார் சங்கர் மகாதேவன்.
இதையும் படியுங்கள் : தனுஷ் 50 படத்தின் டைட்டில் இதுவா? தாறு மாறா இருக்கே.. Internetல் லீக்கான தகவல்!