பிக்பாஸ் பாவனிக்கு என்ன ஆச்சு? திடீர் என நடந்த அறுவை சிகிச்சை... புகைப்படத்துடன் கூறிய அதிர்ச்சி தகவல்!
விஜய் டிவி சீரியல் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான, பாவனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு... தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி, சின்னதம்பி, போன்ற சீரியல்களில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் பாவனி ரெட்டி. இவர் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடினார். ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய விளையாட்டை மிகவும் கவனமாக விளையாடி வந்த இவரை, வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே வந்த அமீர், காதலிப்பதாக கூறியது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே தன்னுடைய காதல் கணவரின் மறைவாலும், அதை தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் நின்று போனதாலும், வேதனையில் இருந்த பாவனி, அந்த சமயத்தில் அமீரின் காதலை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், 'பிக்பாஸ்' ஜோடிகள் நிகழ்ச்சியில் ஒன்றாக சேர்ந்து, அமீருடன் நடனமாடிய போது அவரின் காதலை ஏற்றுக்கொண்டார்.
விரைவில் அமீர் - பாவினி இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவ்வப்போது இருவரும், நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வது... மற்றும் டேட்டிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' படத்திலும் அமீர் - பாவனிஇருவரும் காதலர்களாக நடித்திருந்தனர். சில நிமிடங்கள் மட்டுமே இவர்களின் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்தாலும்... படத்தில் திருப்புமுனையாக அமைந்திருந்தது.
சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றி வரும் பாவனி, தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வரும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு... தனக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது...
"என் வாழ்க்கையில் இந்த 15 நாட்களைக் கழிப்பது மிகவும் கடினமாக இருந்தது. என் கழுத்தில் சிறிய வலி ஏற்பட்டது. வலி நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியது. நான் பல எலும்பியல் நிபுணரிடம் ஆலோசித்தேன், என் பிசியோதெரபியை ஆரம்பித்தேன், ஆனால் வலி தாங்க முடியாமல் போனது. நான் பல தூக்கமில்லாத இரவுகளை கழித்து ஒரு நிலையில் வலியால் அழ ஆரம்பித்தேன். இடையில் எனக்கு படப்பிடிப்புகள் கூட இருந்தன. ஓய்வு எடுக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால் இந்த வலியுடன் வேலையைத் செய்து விட்டு பின்னர் ஹைதராபாத் சென்றேன். எனது படப்பிடிப்பில் இருந்தவர்கள் மிகவும் ஆதரவாக இருந்ததால், என்னை வீட்டில் இருப்பது போல் உணர வைத்தனர்.
அப்படித்தான் எனது படப்பிடிப்பை முடித்தேன். நான் தினமும் என் பிசியோதெரபியைத் தொடர்ந்தேன், ஆனால் வலி மோசமாகிவிட்டது, என்னால் என் வலது கையை தூக்க முடியவில்லை, அது உடைந்தது போல் உணர்ந்தேன். அதிகாலையில் எழுந்து தயாராவது எனக்கு ஒரு பெரிய பணியாக இருந்தது. வலியால் நான் சத்தமாக கத்துவேன். இறுதியாக டாக்டர் சுகுமார் மற்றும் @asian.spine.hospital அவர்களால் செய்யப்பட்ட இந்த (எண்டோஸ்கோபிக் டிஸ்கெக்டமி) அறுவை சிகிச்சையை முடித்துள்ளேன், இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன். வலியிலிருந்து மீட்ட அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி.
'மாமன்னன்' வடிவேலுவுக்கு உதயநிதி கொடுத்த இன்ப அதிர்ச்சி! வைரலாகும் போட்டோஸ்.!
இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளேன். இந்தச் சம்பவத்தில் நான் மட்டுமல்ல, எனது குடும்பத்தினரும், எனது நண்பர்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த வலியில் என் கூடவே இருந்ததற்கு நன்றி அமீர். உங்கள் தூக்கத்தையும் உங்கள் வேலையையும் நான் கெடுத்துவிட்டேன் என்று எனக்குத் தெரியும். எனக்கு வலி இருக்கும் போது, நான் வெறித்தனமான குழந்தையாக மாறுவேன் என்று எனக்குத் தெரியும். எப்போதும் எனக்காக இருப்பதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
அனு நீங்கள் என்னை இயல்பு நிலைக்குத் திரும்பச் செய்ய செய்த பணிகளை நான் அறிவேன். நான் உன்னையும் தொந்தரவு செய்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். என் மனநிலையை, கோபத்தை, விரக்தியை எடுத்துக்கொண்டதற்கு நன்றி .மம்தாவுக்கும் நன்றி என்னைப் பார்வையிட்டு என்னைச் சிறப்படையச் செய்ததற்கு எனது குடும்பத்தினருக்கு நன்றி லவ் யூ ஆல் மிஸ் யூ ஆல் என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.