'மாமன்னன்' படத்தை பார்த்த பின்னர், இயக்குனர் மாரி செல்வராஜை புகழ்ந்து தள்ளியுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன், இந்த படத்திற்காக வடிவேலுவுக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன் வைத்துள்ளார். 

'பரியேறும் பெருமாள்' மற்றும் 'கர்ணன்' ஆகிய படங்களில் எப்படி ஒடுக்கப்பட்ட மக்களின், கதையை எடுத்து கூறி, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் தனக்கென தனி முத்திரை பதித்த மாரி செல்வராஜ், உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் இயக்கி இருந்த திரைப்படம் 'மாமன்னன்'. வழக்கமாக தன்னுடைய பாணியிலேயே, சாதி ரீதியிலான கதையம்சத்துடன் எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் அரசியல் குறித்து பேசியது இப்படத்திற்கு பன்மடங்கு வலு சேர்த்தது.

இப்படம் வெளியான நாள் முதலே தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் மாரி செல்வராஜை அழைத்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தது மட்டும் இன்றி, படம் பற்றி பாராட்டி ட்வீட் ஒன்றையும் போட்டிருந்தார்.

'ஜெயிலர்' படத்தில் ஐட்டம் டான்சராக மாறி... கவர்ச்சியில் வெறியேற்றும் தமன்னா! காவாலா லேட்டஸ்ட் அப்டேட்!

அதே போல் இதுவரை காமெடி வேடத்தில் மட்டுமே பார்த்து பழகிய வடிவேலுவின் மற்றொரு சீரியஸான பரிமாணத்தை இந்த படத்தில் பார்க்க முடிந்தது. உதயநிதி இதுவரை நடந்த படங்களிலேயே படு மாசாகவும், கிளாஸ்சாகவும் 'மாமன்னன்' படத்தில் நடித்திருந்தார் என்றால் அது மிகையல்ல. அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளை குவித்து வரும் இப்படம் பற்றி, தற்போது இயக்குனரும், நடிகை நயன்தாராவின் காதல் கணவருமான விக்னேஷ் சிவன் போட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரஜினி நடிக்க வருவதற்கு முன்பே இப்படி நடந்துருக்கா? சூப்பர் ஸ்டார் பற்றிய ரகசியத்தை பகிர்ந்த மாரிமுத்து!

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், விக்னேஷ் சிவன் கூறியுள்ளதாவது... "மாரி செல்வராஜின் கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன். வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும். முக பாவனையில் மீட்டர் கொஞ்சம் ஏறி இறங்கியிருந்தாலும் அவருடைய காமெடி காட்சிகளை நினைவூட்டிவிடும் அபாயம் இருந்தாலும், தனது அபார நடிப்பால் திரையில் முற்றிலுமாக புது பரிமாணத்தை எட்டியிருக்கும் வடிவேலு sir இந்த நூற்றாண்டு கண்ட ஆகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை!

 உதய் சார் கேரியரில் இதுவே உச்சம். நிஜ வாழ்வில் ஒரு அரசியல் ஆளுமையாக இருந்தபோதிலும் ஒரு இயக்குனர் தனக்கான அரசியலை பேச முழு சுதந்திரம் கொடுத்ததோடு இந்த மாபெரும் படைப்பு உருவாக பக்க பலமாக துணை நின்றதில் அவரது நேர்மை வெளிப்படுகிறது. என கூறியுள்ளார். 

Scroll to load tweet…