விஜய் காசு கொடுத்து ஆபாசமா திட்டவைக்கிறார்! அவரை கைது செய்யுங்கள் டிஜிபி அலுவலகத்தில் ராஜேஸ்வரி பிரியா புகார்!

லியோ பாடலுக்கு எதிராக பேட்டி கொடுத்ததை தொடர்ந்து, விஜய் காசு கொடுத்து... தன்னை சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக ரசிகர்கள் மூலம், திட்ட வைப்பதாக ராஜேஸ்வரி பிரியா கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Rajeshwari Priya complains to DGP office demanding arrested actor Vijay

சென்னை, நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்வரி பிரியா. பாமக மகளிரணியில் பொறுப்பில் இருந்த இவர், பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார். அக்கட்சியின் தலைவராக இருக்கும் ராஜேஸ்வரி பிரியா, தொடர்ந்து,  மதுபானம், புகையிலை போன்றவற்றிக்கு எதிராக குரல் கொடுத்து வருவது மட்டும் இன்றி போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். 

இதை தொடர்ந்து கடந்த மாதம் ஜூன் 22- ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, “லியோ படத்தில் விஜய் படி, 2000 நடன கலைஞர்களுடன் நடனமாடிய 'நா ரெடி' பாடல் வெளியான நிலையில், இப்பாடல் முழுவதுமே சரக்கு... தம்மு... என போதை ஏற்றும் வார்த்தைகள் கொட்டி கிடந்ததால், இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என கூறினார். மேலும் இந்த பாடலுக்கு எதிராக புகார் மனுக்களும் தாக்கல்செய்யப்பட்டது .

Rajeshwari Priya complains to DGP office demanding arrested actor Vijay

சிம்பு பட ஹீரோயின் சனா கானுக்கு குழந்தை பிறந்தாச்சு! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

இந்நிலையில் இந்த பாடலை நான் எதிர்ப்பதால் விஜய் காசு கொடுத்து, தன்னை ஆபாசமாக சமூக வலைதளத்தில் திட்ட வைக்கிறார் என கூறி, இன்று காலை ராஜேஸ்வரி ப்ரியா... டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். புகார் கொடுத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராஜேஸ்வரி ப்ரியா, "உயர்திரு டிஜிபி சங்கர் ஜிவால் அவர்களை சந்தித்து விஜய் அவர்களை கைது செய்ய வேண்டும் என கூறி, மனு கொடுத்துள்ளேன். இதற்கான காரணம் ஜூன் 22-ஆம் தேதி லியோ படத்தில் இருந்து ஒரு பாடல், சோனி சவுத் மியூசிக்கல் youtube தளத்தில் வெளியானது. இந்த பாடலில் "மது - புகை" உடல் நலத்திற்கு கேடு என்கிற விழிப்புணர்வுவாசகம் கூட இடம்பெறாமல் இந்த பாடல் வெளியாகி இருந்தது.

Rajeshwari Priya complains to DGP office demanding arrested actor Vijay

'மாமன்னனுக்காக' வடிவேலுவுக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும்! நயன் கணவர் விக்கி புகழாரம்!

இந்த பாடலில் இடம்பெற்ற அனைத்து வரிகளுமே, புகை மற்றும் மது சம்பந்தமாகவே இருந்தது. இது போன்ற வரிகள் இளைஞர்களையும், சிறுவர்களையும், பாதிக்கும் வண்ணம் இருந்தது. இந்த வரிகளை நீக்க வேண்டும் என்றும், பல இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விஜய்க்கு ரசிகர்களாக இருந்தும் கொஞ்சம் கூட சிந்திக்காமல், ஏன் இப்படி ஒரு பாடலில், நடிக்க வேண்டும் என நான் ஒரு பேட்டி கொடுத்திருந்தேன். அந்த பேட்டியை சுமார் 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்திருந்தனர். இதன் விளைவாக விஜய் பணம் படைத்தவர் என்பதை காட்டும் விதமாக பல போலி ட்விட்டர் ஐடி-யை தொடங்கச் சொல்லி, பணம் கொடுத்து என்னை பற்றி பல ஆபாசமான வசனங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இப்படி பட்ட செயலை எந்த ஒரு பெண்ணாலும் தாங்கிக் கொள்ள முடியாது.

ஒரு சாமானிய பெண்ணாக இருந்து, அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்காகவும்,  மண்ணுக்காகவும் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறேன் நான். டாஸ்மாக்கு எதிராக வழக்கு போட்டது நான் தான், மக்களுக்காக பலமுறை கைதாகி உள்ளேன். இது போல் தொடர்ச்சியாக மக்களுக்காக போராடிவரும் என்னையே இவ்வளவு ஆபாசமாக கூறி அச்சுறுத்துகிறார் விஜய் என்றால், அதற்கு காரணம் அவர் தான். மேலும் இதுபோன்ற ஆபாச ட்வீட் மற்றும் வீடியோக்களில், விஜய்யின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தை டேக் செய்துள்ளனர். வாங்கிய பணத்திற்கு நாங்கள் வேலை செய்கிறோம் என்பதை விஜய் தெரிந்து கொள்ளும் விதமாக அந்த ஃபேக் ஐடி காரர்கள் விஜய்யை டேக் செய்துள்ளனர் என ராஜேஸ்வரி பிரியா கூறியுள்ளார்.

Rajeshwari Priya complains to DGP office demanding arrested actor Vijay

தனுஷ் இயக்கி - நடிக்கும் D50 படப்பிடிப்பு துவங்கியது! ரணகளமான போஸ்டருடன் வெளியான அறிவிப்பு!

இன்று விஜய் மீது புகார் கொடுக்கும் நீங்கள் மற்ற  நடிகர் - நடிகைகள் மீது புகார் கொடுத்துள்ளீர்களா? என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இதே ராஜேஸ்வரி பிரியா தன 'ஆடை' என்கிற படம் வெளியான போது, அந்த படத்தின் போஸ்டரை தமிழகத்தில் ஒட்டாமல் தடுத்தது. கஞ்சா பூ கண்ணால என்கிற பாடலை, எதிர்த்து பேட்டி கொடுத்தது நான் தான். சர்க்கார் படத்தில் விஜய் சிகரெட்டுடன் வரும் காட்சிக்கு எதிராக பேட்டி கொடுத்தது நான் தான். இது போல் பல இடங்களில், பல விஷயங்களுக்கு எதிராக நான் பதிவிட்டு கொண்டு தான் இருக்கிறேன். அந்த நடிகர்.. இந்த நடிகர்... என நான் எந்த விதமான பேதமும் பார்ப்பதில்லை. அதிலும் குறிப்பாக விஜய்க்கு, இரண்டு மூன்று நான்கு வயது குழந்தைகள் பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பதால், கூடுதலாக ஒரு தாய்மை உணர்வு இருக்கத்தான் செய்யும் என தெரிவித்தார்.

Rajeshwari Priya complains to DGP office demanding arrested actor Vijay

சிகரெட் என்கிற பழக்கம் influence மூலம் தான், அதிகமாகிறது. விஜய் வாயில் சிகரெட்டை வைத்திருக்கும் போது ஒரு மூணு வயது சிறுவன் நானும் பெரியவனாகி இது போல், சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தால்... அதை உங்களால் தடுக்க முடியுமா? அவன் நல்ல கேரக்டரா... கெட்ட கேரக்டரா... கேங் ஸ்டாரா என்பதெல்லாம்  அடுத்த விஷயம், அதேபோல் சினிமாவுக்கு என்று தேவைப்பட்டால் நீங்கள் அக்டோபர் மாதம் தான் இந்த பாடலை வெளியிட்டு இருக்க வேண்டும், ஏன் படம் வருவதற்கு முன்பு வெளியிட வேண்டும்? என ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினார்.

ரஜினி நடிக்க வருவதற்கு முன்பே இப்படி நடந்துருக்கா? சூப்பர் ஸ்டார் பற்றிய ரகசியத்தை பகிர்ந்த மாரிமுத்து!

விஜய் தான் தன்னை ஆபாசமாக பணம் கொடுத்து திட்ட வைக்கிறார், என்பதற்கான ஆதாரங்கள் டிஜிபி அலுவலகத்திலும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், யார் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்பதை கண்டுபிடிக்கவே தற்போது புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். விஜய்யின் ரசிகர் ஒருவர், தன்னை கொளுத்தி விடுவேன் என மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது கோலிவுத் திரை திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios