MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சிம்பு பட ஹீரோயின் சனா கானுக்கு குழந்தை பிறந்தாச்சு! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

சிம்பு பட ஹீரோயின் சனா கானுக்கு குழந்தை பிறந்தாச்சு! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

நடிகை சனா கான், ஆண் குழந்தைக்கு தாய்யானதாக கூறியுள்ள தகவலை தொடர்ந்து பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Jul 05 2023, 11:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பாலிவுட்திரையுலகின் மூலம்  நடிகை சனா கான் அறிமுகமாக இருந்தாலும், தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான, ஈ படத்தில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். இதன் பின்னர்  2008 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'சிலம்பாட்டம்' படத்தில் இரட்டை வேடங்களில் நடித்த சிம்புவில், மகன் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். இதுவே தமிழில் ஹீரோயினாக இவர் நடித்த முதல் படமாகும்.


 

25

சிலம்பாட்டம் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து சில தமிழ் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. அந்த வகையில் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் வெளியான பயணம், பரத்துக்கு ஜோடியாக தம்பிக்கு எந்த ஊரு, போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான 'அயோக்கியா' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

குழந்தை பருவத்தில் பாலியல் தொல்லை.. 2 முறை தற்கொலை முயற்சி.! காதல் பட நடிகை சரண்யாவின் வேதனை நிறைந்த மறுபக்கம்

35
Sana Khan

Sana Khan

மேலும் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது வெற்றியாளராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ள இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு முஃப்தி அனாஸ் சையத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர், முற்றிலும் திரையுலகில் இருந்து விலகிய சனா கான் தன்னுடைய கணவருடன் சேர்ந்து அவருடைய தொழிலையே கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

 

45

இந்நிலையில் கடந்த ஆண்டு தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்த அறிவித்த சனா கான், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது சனா கானை அவருடைய கணவர் கையை பிடித்து தர தரவென இழுத்து சென்ற வீடியோ  சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. பின்னர் இதற்கான விளக்கத்தையும் சனா கான் கொடுத்திருந்தார்.

'மாமன்னனுக்காக' வடிவேலுவுக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும்! நயன் கணவர் விக்கி புகழாரம்!

55

தற்போது கர்ப்பமாக இருந்த சனா கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதள பக்கத்தில், சனா கான் கூறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில், எங்கள் குழந்தைக்காக அல்லாஹ் எங்களை சிறந்தவர்களாக மாற்றுவாராக. உங்கள் அன்பு மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி அல்லாஹ் உங்களுக்கு நல்லதையே செய்வாராக என தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சனா கானுக்கும் அவரின் கணவருக்கும் ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தாய் கிழவி முதல் தடயம் வரை... பிப்ரவரி 27ல் தியேட்டர் & OTT-ல் புது ரிலீஸ் என்னென்ன?
Recommended image2
நான் யாரையும் காலி பண்ண வரல; எனக்கு சிலர் தடை போடுறாங்க..! புயலை கிளப்பிய சிவகார்த்திகேயன் ஸ்பீச்
Recommended image3
கர்ப்பமாகி 2 வருஷம் ஆச்சு இன்னும் குழந்தை பிறக்கல... சன் டிவி சீரியல் பரிதாபங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved