தனுஷ் D50 படத்தின் டைட்டில் இதுவா? சும்மா தாறு மாறா இருக்கே.. சமூக வலைத்தளத்தில் லீக்கான தகவல்!
தனுஷ் இயக்கி நடித்து வரும் D50 படத்தின் டைட்டில் குறித்த தகவல், தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
நடிகர் தனுஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக D50 படத்திற்கு தயாராகி உள்ளார். தனுஷின் 50-ஆவது படமாக தயாராகி வரும் இந்த படத்தை, அவரே இயக்கி நடிக்கிறார். மேலும் அவ்வபோது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்களும் வெளியாகி வருகிறது.
தனுஷ் இயக்கிய நடிக்கும் D50 படத்திற்கு 'ராயன்' என படுமாஸாக பெயர் வைத்துள்ளாராம். இந்த படத்தில், இதுவரை பார்த்த தனுஷை விட மிகவும் வித்தியாசமான தோற்றத்தில், அதாவது மொட்டை தலையோடு நடிக்க உள்ளார்.
'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு, தனுஷ் தன்னுடைய மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று மொட்டையடித்து தன்னுடைய வேண்டுதலை நிவர்த்தி செய்து வந்தார். திருப்பதி போய் வந்த இரண்டு நாட்களிலேயே D50 படத்தின் படப்பிடிப்பையும் துவங்கினார். அதே போல் நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானதாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்த நிலையில்... அந்த போஸ்டரிலும் மொட்டை தலையுடன் தனுஷ் திரும்பி நிற்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
Dhanush
இப்படத்தை, கலாநிதி மாறன் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை ஈசிஆரில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் எளிமையாக நடந்த நிலையில், தற்போது படபிடிப்பையும் துவங்கியுள்ளார் தனுஷ். விரைவில் இப்படம் குறித்த டீசரையும் தனுஷ் வெளியிட தயாராகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படம் முழுக்க முழுக்க வடசென்னையை மையமாக வைத்து உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
'ராயன்' என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில், தனுஷ் உடன் சேர்ந்து பல நடிகர்கள் நடிக்க உள்ளனர். அதன்படி ஏற்கனவே வெளியாகியுள்ள தகவலின் படி, தூஷரா விஜயன், அபர்ணா பால முரளி, விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மூன்று மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து, கூடிய விரைவிலேயே ரிலீஸ் செய்யவும் தனுஷ் திட்டமிட்டுள்ளாராம். ஏற்கனவே தனுஷ் இயக்கி நடித்த பா பாண்டி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், 'ராயன்' என பெயர் வைத்துள்ளதாக கூறப்படும் D50 படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.