நயன்தாராவின் 'ஜவான்' பட லுக் லீக்! கோட் - சூட்டில் ஹாலிவுட் நாயகி ரேஞ்சில் தெறிக்கவிடும் லேடி சூப்பர் ஸ்டார்!
இயக்குனர் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள, 'ஜவான்' படத்தில் இருந்து நயன்தாராவின் லுக் தற்போது லீக் ஆகி சமூக வலைதளத்தை தெறிக்க விட்டு வருகிறது.
தமிழில் நயன்தாரா, ஜெய், ஆர்யா, நஸ்ரியா, ஆகிய பிரபலங்கள் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில், என அடுத்தடுத்து மூன்று வெற்றி படங்களை இயக்கினார். தற்போது பாலிவுட் கிங் காங் ஷாருக்கானை கதாநாயகனாக வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் படபிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மேலும் இப்படம், செப்டம்பர் 7ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.
இந்த படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 220 கோடி பட்ஜெட்டில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்தின் அப்டேட் அவ்வபோது வெளியாகி வரும் நிலையில், தற்போது நயன்தாராவின் ஜவான் பட லுக் குறித்த புகைப்படம் ஒன்று லீக் ஆகியுள்ளது.
படம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியே கசிந்துவிட கூடாது என படக்குழு பொத்தி பொத்தி பாதுக்காத்து வந்த நிலையில், அதையெல்லாம் மீறி எப்படியோ ட்ரைலர் ரிலீசுக்கு முன்பே நயன்தாராவின் புகைப்படம் லீக் ஆகி படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த புகைப்படத்தில் நயன்தாரா, மிகவும் ஸ்டைலிஷ் நாயகியாக மாறி கோட் - சூட்... அணிந்து ஃப்ரீ ஹேர் அழகில், தேவதை போல் ஜொலிக்கிறார். ரசிகர்கள் நயன் ஹாலிவுட் நாயகிகளையே அசர வைக்கும் அழகில் இருப்பதாக கூறி வருகிறார்கள். இந்த புகைப்படமும் தாறுமாறாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.