- Home
- Cinema
- Maamannan: வசூலில் அடித்து தும்சம் செய்யும் மாமன்னன்..! 7 நாட்களில் எவ்வளவு கலெக்ஷன் செய்துள்ளது தெரியுமா?
Maamannan: வசூலில் அடித்து தும்சம் செய்யும் மாமன்னன்..! 7 நாட்களில் எவ்வளவு கலெக்ஷன் செய்துள்ளது தெரியுமா?
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கடந்த வாரம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியான 'மாமன்னன்' திரைப்படம் 7 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது, என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்த மாரி செல்வராஜ், 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். இந்த படத்தை... நீலம் புரோடக்ஷன் மூலம், இயக்குனர் பா. ரஞ்சித் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தன்னுடைய இரண்டாவது படமாக 'கர்ணன்' படத்தை தனுஷை ஹீரோவாக வைத்து இயக்கி இருந்தார் மாரி .
maamannan
கொடியன்குளம் பகுதியில் நடந்த, கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர்... விக்ரம் - துருவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. அதே போல், மீண்டும் தனுஷை வைத்து இயக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியான நிலையில், ஒரு சில காரணங்களால் இந்த படங்கள் கிடப்பில் போடப்பட்டது.
பின்னர் திடீர் என உதயநிதியை வைத்து 'மாமன்னன்' படத்தை இயக்க துவங்கிய மாரி செல்வராஜ். உதயநிதி மற்றும் வடிவேலு திரையுலக வாழ்க்கையில் மாஸ்டர் பீஸ்சாக அமைந்துள்ளது இப்படம். 'மாமன்னன்' திரைப்படம் கடந்த வாரம், உலகம் முழுவதும் வெளியான நிலையில், தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவது மட்டும் இன்றி, பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
இப்படம் வெளியாகி, ஒரு வாரத்தை எட்டியுள்ள நிலையில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற தகவல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. முதல் நாளே 10 கோடி வசூல் செய்த 'மாமன்னன்' திரைப்படம், 7 நாட்கள் முடிவில் 48 கோடி முதல் 50 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருவதால், இரண்டாவது வாரமும் பல திரையரங்குகளை 'மாமன்னன்' ஆக்கிரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.