Indian 2 Tickets : நாளை ஜூலை 12ம் தேதி கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், டிக்கெட் புக்கிங் வெகு ஜோராக நடந்து வருகின்றது.

சுமார் 28 ஆண்டுகள் கழித்து, மீண்டும் இயக்குனர் சங்கர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் இணைந்துள்ள திரைப்படம் தான் இந்தியன் 2. 1996ம் ஆண்டு வெளியான "இந்தியன்" திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் நாளை ஜூலை மாதம் 12ஆம் தேதி உலக அளவில், பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. 

ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் துவங்கியுள்ள நிலையில், திருச்சி, சென்னை, மதுரை மற்றும் கோவை போன்ற பெரு நகரங்களில், ஆன்லைன் புக்கிங் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பொழுது 90 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை, இருக்கை வசதியை பொறுத்து டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அட்ரா சக்க.. இதைப்போய் இவ்ளோ லேட்டா சொல்றிங்களே சங்கர் சார்.. இந்தியன் 2வில் ARR - வெளியான மாஸ் அப்டேட்!

இந்தியன் 2 திரைப்படம் IMAX 2D மற்றும் 4DX தளத்திலும் வெளியாகவுள்ள நிலையில், அந்த வசதிகள் உள்ள திரையரங்குகளில் IMAX 2Dயில் இந்தியன் 2 படத்தை பார்க்க 440 ரூபாய் ஒரு டிக்கெட்டிற்கு வசூலிக்கப்படுகிறது. அதேபோல இந்தியன் 2 படத்தை 4DX வசதிகொண்ட திரையரங்குகளில் பார்க்க, ஒரு டிக்கெட் 590 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும் தமிழக அரசு இந்தியன் 2 திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை ஒரே ஒரு திரை கொண்ட திரையரங்குகளில் 5 காட்சிகளாக இந்தியன் திரைப்படம் வெளியாக உள்ளது. அதேநேரம் அதிக கட்டணத்தோடு டிக்கெட் விற்பனை செய்வதை கண்காணிக்கவும் சில குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

படத்துக்கு படம் பிரம்மாண்டம்.. பல கோடிகளில் சம்பளம்.. "கோலிவுட்டின் ஸ்பில்பேர்க்" சங்கர் - Net Worth எவ்வளவு?