Indian 2 : இந்தியன் 2 திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அட்டகாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குனர் சங்கர்.

பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படைப்பு தான் இந்தியன் 2. உலகநாயகன் கமலஹாசன் அவர்களுடைய நடிப்பில் நாளை ஜூலை 12ம் தேதி இந்த திரைப்படம் உலக அளவில் வெளியாகிறது. ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படம் இவ்வாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படமாக மாறியுள்ளது என்றே கூறலாம். கடந்த 1996ம் ஆண்டு பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது அனைவரும் அறிந்ததே. மேலும் இந்த திரைப்படம் குறித்து சங்கர் அண்மையில் சில தகவல்களை வெளியிட்டார். 

வரலட்சுமிக்கு கல்யாணம்.. நச்சென்று இச்சொன்று தந்த சச்தேவ் - இரு மனைவிகளுடன் மகள் திருமணத்தில் சரத் - Cool Pics

அதில், இந்தியன் 2 திரைப்படம் முடிந்த பிறகு சுமார் 2.30 நிமிடங்கள் ஓடும் "இந்தியன் 3" படத்திற்கான ட்ரெய்லர் வெளியாகும் என்றும், இந்தியன் 2 வெளியான 6 முதல் 7 மாத இடைவெளியில் இந்தியன் 3 திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவித்திருக்கிறார். 

ARRன் தீம் மியூசிக்

இந்தியன் திரைப்படத்தை பொருத்தவரை, கதை எந்த அளவிற்கு ஆழமாக இருந்ததோ, அதே அளவிற்கு இசையும் பெரிய அளவில் பாராட்டை பெற்றது. இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்திற்கு A.R Rahuman இசையமைக்காதது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்திய அதே நேரம், ராக் ஸ்டார் அனிருத் இசை, இக்கால ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கிருக்கிறது. 

Scroll to load tweet…

நாளை இந்தியன் 2 வெளியாக உள்ள நிலையில், இப்பொது பரபரப்பு அறிவிப்பு ஒன்றை இயக்குனர் சங்கர் வெளியிட்டுள்ளார். அதன்படி "இந்தியன்" திரைப்படத்தில் உள்ள "சேனாபதியின் தீம் மியூசிக்" சில, இந்த இந்தியன் 2 படத்திலும் இடம்பெற்றிருக்கிறது. ஆகவே அதை யாரும் மிஸ் செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஏ ஆர் ரகுமானுக்கும், அனிருத்துக்கும் தனது நன்றிகளையும் அவர் தெரிவித்திருக்கிறார்.

வேட்டி சட்டையில் கெத்து காட்டும் அட்லீ! மெர்சனலான லுக்கில் தெறிக்க விடும் போட்டோஸ்!