- Home
- Gallery
- படத்துக்கு படம் பிரம்மாண்டம்.. பல கோடிகளில் சம்பளம்.. "கோலிவுட்டின் ஸ்பில்பேர்க்" சங்கர் - Net Worth எவ்வளவு?
படத்துக்கு படம் பிரம்மாண்டம்.. பல கோடிகளில் சம்பளம்.. "கோலிவுட்டின் ஸ்பில்பேர்க்" சங்கர் - Net Worth எவ்வளவு?
Director Shankar Net Worth : பிரபல இயக்குனர் சங்கர், அதிக சம்பளம் பெரும் காஸ்டலி இயக்குனர்களில் ஒருவர். அவர் இயக்கத்தில் நாளை வெளியாகிறது "இந்தியன் 2".

indian 1996
கும்பகோணத்தில் பிறந்து, இன்று தமிழ் திரை உலகின் மிகவும் வெற்றிகரமான இயக்குனராக பயணித்து வருபவர் தான் சங்கர். 60 வயதான இயக்குனர் சங்கர், கடந்த 1993ம் ஆண்டு வெளியான பிரபல நடிகர் அர்ஜுனனின் "ஜென்டில் மேன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார்.
Shankar Movies
1993 முதல் 2024 வரை இந்த 31 ஆண்டுகால திரையுலக பயணத்தில், சங்கர் வெறும் 14 திரைப்படங்களை தான் இயக்கி உள்ளார் என்பது நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயம். காரணம், குறைவான அளவிலான திரைப்படங்களை இயக்கியிருந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து பயணித்து வரும் இயக்குனராக அவர் உள்ளார்.
indian movie
நாளை வெளியாக உள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் பணியாற்ற, இயக்குனர் சங்கர் சுமார் 50 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு 30 முதல் 40 கோடி ரூபாய் இயக்குனர் சங்கர் சம்பளமாக பெறுவதுண்டு என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
rajamouli
இயக்குனராக மட்டுமல்லாமல், 1993ம் ஆண்டு வெளியான தனது "முதல்வன்" திரைப்படம் முதல், இதுவரை 11 திரைப்படங்களை தனது S Pictures சார்பாக அவர் தயாரித்தும் வழங்கியுள்ளார். பான் இந்திய இயக்குனரான சங்கரின் நெட் ஒர்த் சுமார் 1000 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தன்வசம் பல சொகுசு கார்களை அவர் வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.