கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம்... இதயம் நொறுங்கிப்போனேன்! ஆதங்கத்தோடு ஜி.வி.பிரகாஷ் போட்ட பதிவு!
அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை கொடுக்கப்பட்டதன் காரணமாகவே கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் போட்டுள்ள பதிவு தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா. 17 வயதே ஆகும் இவர், காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக சென்னை கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், காலில் ஜவ்வு கிழிந்துள்ளதாக கூறியுள்ளனர். இதற்கு சிறிய அறுவை சிகிச்சை செய்தால் போதும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம்... நாங்களே சரி செய்து விடுகிறோம் என தெரிவித்து அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அறுவை சிகிச்சை செய்த பின் பிரியாவிற்கு காலில் அதிகம் வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்து அவருக்கு அவ்வபோது வலி நிவாரணி ஊசிகளும், மயக்க ஊசியும் கொடுத்ததாக அவரது பெற்றோர் கூறுகின்றனர். மேலும் சீனியர் மருத்துவர்கள் வந்து பரிசோதித்தபோது, பிரியாவின் காலில் ரத்தம் அளவுக்கு அதிகமாக வெளியேறி உள்ளது. எனவே இறுக்கமாக கட்டு போட்டு அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துப் போகும்படி கூறியுள்ளனர்.
Pushpa 2 Movie: 'புஷ்பா 2' படத்தில் சமந்தா இடத்தை பிடித்த பிரபல நடிகை..! யார் தெரியுமா?
பின்னர் உடனடியாக பிரியாவை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். பின்னர் பிரியா இறந்துள்ளார். இந்த சம்பவம் தமிழக முழுவதும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சை தான் பிரியாவின் மரணத்திற்கு காரணம் என்றும், எனவே பிரியாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளத்திலும் பலர் அரசு மருத்துவமனையில் கவனக்குறைவாக செயல்பட்ட அனைவரும் தண்டிக்க வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது...
“என் Game என்னை விட்டு போகாது,Come back குடுப்பேன்” தங்கை ப்ரியாவின் கடைசி வார்த்தைகள். நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப்போனேன். இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள் அவர்களை காப்பது நம் அனைவரின் கடமை #JusticeForPriya என பதிவிட்டுள்ளார்.
Varisu Movie: 'வாரிசு' படத்தின் கிளைமேக்ஸ் காட்சி லீக்..! உச்ச கட்ட அதிர்ச்சியில் படக்குழு..!
- chennai football player priya
- football player
- football player priya
- football player priya about death
- football player priya about ma subramanian
- football player priya dead
- football player priya death
- football player priya news
- football player priya tamil
- football player priya tamil nadu
- priya food ball player about death
- priya football player
- priya football player about death
- priya football player chennai
- priya football player death
- priya football player news
- gv prakash tweet
- music director gv prakash