Varisu Movie: 'வாரிசு' படத்தின் கிளைமேக்ஸ் காட்சி லீக்..! உச்ச கட்ட அதிர்ச்சியில் படக்குழு..!
தளபதி விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இணைய தளத்தில் வெளியாகியுள்ளது படக்குழுவினரை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில், தளபதி விஜய் முதல் முறையாக நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. முழுக்க முழுக்க குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள, இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ள நிலையில், ஒரு சில காரணங்களால், இப்படம் வெளியாகுமா? வெளியாகாதா? என்கிற குழப்பமும் நீடித்து வருகிறது.
படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டதால், ஒரு பக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல் இப்படத்தின் புரோமோஷன் பணிகளிலும் படக்குழுவினர் கவனம் செலுத்தி வருகின்றனர். மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
மேலும் பிரபு, சரத்குமார், குஷ்பூ போன்ற பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சமீபத்தில், 'வாரிசு' திரைப்படத்தில் தளபதி விஜய் பாடிய 'ரஞ்சிதமே' பாடல் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்று, குறைந்த நேரத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாக தொடர்ந்து சாதனை செய்து வரும் நிலையில், இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இணையத்தில் லீக் ஆகியுள்ளது ஒட்டுமொத்த படக்குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
படப்பிடிப்பு காட்சிகள் வெளியாகிவிட கூடாது என, தீவிர பாதுகாப்புக்கு மத்தியில் வாரிசு படம் படமாக்கப்பட்ட நிலையில், அதையும் மீறி சில சமயங்களில்... சில காட்சிகள் வெளியானது. எனவே இப்படி ஏதேனும் காட்சிகள் வெளியானால் அதனை ஷேர் செய்யாமல் ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என படக்குழுவினர் வேண்டுகோள் வைத்த நிலையில், தற்போது படத்தின் கிளைமேக்ஸ் காட்சியே வெளியாகியுள்ளதால் உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் படக்குழுவினர்.
Sneha: விவாகரத்து முடிவில் சினேகா - பிரசன்னா ஜோடி? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒற்றை புகைப்படம்!