விஜய் டிவி 'குக் வித் கோமாளி' ரித்திகாவுக்கு திருமணம்..! அட மாப்பிள்ளை யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்!
சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி, 'குக் வித் கோமாளி' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமான ரித்திகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியில், ஏதேனும் சீரியல் அல்லது ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலே அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்துவிடும். அந்த வகையில் 'குக் வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சியில் வயல் கார்டு போட்டியாளராக கலந்து கொண்டு சமையல் திறமையை வெளிப்படுத்தியவர் ரித்திகா.
இவர் சில தினங்கள் மட்டுமே விளையாடினாலும், ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக பாலாவுடன் இவர் அடித்த லூட்டி எக்கச்சக்கம்.
ரித்திகா ஏற்கனவே விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'ராஜா ராணி' சீரியலில் வினோ என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். அதை போல் 'பாக்கியலட்சுமி' சீரியலில் அனைவரது ஃபேவரட் கதாபாத்திரமான எழிலுக்கு ஜோடியாக அமிர்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இவருக்கும், எழிலுக்கும்... திருமணம் நடைபெறுவதற்கு முன்பாகவே உண்மையிலேயே ரித்திகா திருமணத்திற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இது குறித்து பிரபல தொகுப்பாளினி டிடி திருமணப் பெண்ணை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் போட்ட பதிவு வைரலாகி வருகிறது.
அட்லி செயலால் ஆத்திரம் அடைந்த ஷாருக்கான்... எச்சரித்தாரா? என்ன பிரச்சனை... வெளியான லேட்டஸ்ட் தகவல்!
இதன் மூலம் ரித்திகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள தகவல் உறுதியாகியுள்ளது. மேலும் ரித்திகா டிடிக்கு அழைப்பிதழ் கொடுக்க தான் அவருடைய வீட்டிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இவருடைய திருமணம் குறித்து வெளியாகியுள்ள தகவலில், ரித்திகாவை திருமணம் செய்து கொள்ள உள்ள மாப்பிள்ளையின் பெயர் வினு என்றும், இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் கிரியேட்டிவ் புரோடியூசராக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுளளது.
Sneha: விவாகரத்து முடிவில் சினேகா - பிரசன்னா ஜோடி? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒற்றை புகைப்படம்!
இதுவரை திருமணம் குறித்து ரித்திகா வாய் திறக்காத நிலையில், விரைவில்... சமூக வலைத்தளத்தில் திருமணம் குறித்த தகவலை அதிகார பூர்வமாக வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரசிகர்கள் ரித்திகாவின் திருமண செய்தி வெளியாகியுள்ளதால் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.