இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..! மீராமிதுனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்..! அதிரடி காட்டும் போலீஸ்..!
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து தலைமறைவாக உள்ள மீராமிதுனுக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் மாடலும், பிக்பாஸ் பிரபலமுமான மீராமிதுன் கடந்த ஆண்டு தன்னுடைய ஆண் நண்பருடன் இணைந்து பட்டியல் இனத்தவர் குறித்து அவதூராக பேசி வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவுக்கு எதிராக, நடிகை மீராமிதுனை கைது செய்ய வேண்டும் என்று பலர் கொந்தளித்த நிலையில், மீராமிதுன் மீது வழக்கும் தொடரப்பட்டது.
இது குறித்து மீராமிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், போலீசில் ஆஜராகாமல் தன்னுடைய ஆண் நண்பருடன், கேரள மாநிலத்திற்கு ஓட்டம் பிடித்தார். இவரை வலைவீசி தேடிய போலீசார்... மீராமிதுன் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பதுங்கி இருப்பதை அறிந்து சுற்றிவளைத்து கைது செய்தனர். தமிழக போலீசார் கைது செய்ய வந்தபோது, என்ன தொட்டுப் பாரு... அப்படி... இப்படி... என கத்தி கூச்சல் போட்ட மீரா மிதுனை, ஒரு வழியாக அடக்கி கைது செய்த போலீசார் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
பலமுறை மீராமிதுன் ஜாமீனில் வெளிவர முயற்சி செய்த நிலையில், சில மாதங்கள் கழித்து நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். மேலும் ஓவராக வாயை விடாமல், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும், சில வீடியோ ஆல்பங்களை மட்டுமே வெளியிட்டு வந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீராமிதுன் கோர்ட்டில் ஆஜர் ஆகாததால் அவருக்கு மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
மேலும் மீராமிதுனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிடப்பட்டது. ஆனால் மீராமிதுன் போலீசாருக்கு பயந்து தலைமறைவானார். இந்நிலையில், அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த லுக் அவுட் நோட்டீஸ் நாளை கொடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தன்னுடைய மகள் மீராமிதுன் காணவில்லை என, அவரது தாயார் சியாமளா காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Sneha: விவாகரத்து முடிவில் சினேகா - பிரசன்னா ஜோடி? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒற்றை புகைப்படம்!