அதிர்ச்சி... மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி..! கவலைக்கிடமாக ICU -வில் தீவிர சிகிச்சை!

டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும், மகேஷ் பாபுவின் தந்தையும், மூத்த நடிகருமான கிருஷ்ணா உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

Mahesh babu father veteran actor krishna admitted hospital

தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது சூப்பர் ஸ்டார் நடிகர் என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளவர் மகேஷ் பாபு. இவருடைய தந்தையும், மூத்த தெலுங்கு நடிகருமான கிருஷ்ணா இன்று அதிகாலை 1.15 மணியளவில், மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவருடைய உடல்நிலை குறித்து, மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

Mahesh babu father veteran actor krishna admitted hospital

இவருடைய உடல்நலம் குறித்து கான்டினென்டல் ,மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'நடிகர் கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது... அவருக்கு லேசான மாரடைப்பு இருந்ததாகவும், மேலும் அவர் சுவாச கோளாறு காரணமாகவும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர், மாரடைப்பு ஏற்பட்டதை உறுதி செய்த மருத்துவர்கள். உடனடியாக CPR சிகிச்சை கொடுத்த பின்னர் உடனடியாக ICU-வில் அனுமதித்து, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை கொடுக்க துவங்கியுள்ளனர். தற்போது அவருடைய உடல் நிலை கிரிட்டிகளாக இருப்பதால், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sneha: விவாகரத்து முடிவில் சினேகா - பிரசன்னா ஜோடி? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒற்றை புகைப்படம்!

80 வயதாகும் மூத்த நடிகர் கிருஷ்ணாவின் உண்மையான பெயர் கட்டமனேனி சிவராம கிருஷ்ண மூர்த்தி என்பதாகும். தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான இவரின் உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரசிகர்கள் பலர்... கிருஷ்ணா விரைவில் குணமடைய தங்களுடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Mahesh babu father veteran actor krishna admitted hospital

மகேஷ் பாபுவின் தந்தையும், நடிகருமான கிருஷ்ணாவுக்கு விஜய நிர்மலா மற்றும் இந்திரா தேவி என இரண்டு மனைவிகள். இவருடைய இரண்டாவது மனைவி விஜய நிர்மலா 2019 ஆம் ஆண்டுகாலமானார், முதல் மனைவி இந்திரா தேவியின் மகன் தான் மகேஷ் பாபு. இவருடைய தாயார் கடந்த செப்டம்பர் மாதம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Samantha: கண்கலங்க வைக்கும் சமந்தாவின் நிலை? ஒரு கையில் ஊசி... மற்றொரு கையால் உடல் பயிற்சி ஷாக்கிங் வீடியோ..!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios