Sneha: விவாகரத்து முடிவில் சினேகா - பிரசன்னா ஜோடி? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒற்றை புகைப்படம்!
தமிழ் திரையுலகின் கியூட் நட்சத்திர ஜோடியான சினேகா - பிரசன்னா விவாகரத்து குறித்த தகவல், கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் தீயாக பரவி வந்த நிலையில், தற்போது இதற்கு ஒற்றை புகைப்படத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை சினேகா.
தமிழ் சினிமாவில், நடிகை கே.ஆர்.விஜயாவை தொடர்ந்து புன்னகை அரசி, என்ற பட்டத்தை தனதாக்கிக் கொண்டுள்ளவர் சினேகா. இவர் தமிழில் நடித்த 'ஆனந்தம்', 'பமல் கே சம்பந்தம்', 'புன்னகை தேசம்', 'உன்னை நினைத்து', வசீகரா போன்ற படங்கள் தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்துள்ளது. அதேபோல் காதல் படங்களைத் தவிர்த்து,'ஆட்டோகிராப்', 'புதுப்பேட்டை', 'பள்ளிக்கூடம்', 'பவானி' போன்று கதைக்கும், கதாபாத்திரத்திற்கும், வலு சேர்க்கும் கேரக்டரை தேர்வு செய்து நடித்துள்ளார்.
நடிகை சினேகா கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான, 'அச்சமின்றி அச்சமின்றி' படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் உருவானது. பின்னர் இருவருமே பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகன் உள்ளனர். குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி வருவதால்... திரைப்படங்கள் நடிப்பதை தவிர்த்து வரும் சினேகா, அவ்வப்போது சில விளம்பரங்களிலும், டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில்... நடுவராகவும் இருந்து வருகிறார். மேலும் கூடிய விரைவில் திரைப்படங்களிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் பிரசன்னாவும் மிகவும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தாலும், தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதைகளை மட்டுமே சமீப காலமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்களாக சினேகா - பிரசன்னா ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து முடிவை கையில் எடுத்துள்ளதாக சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவியது.
இந்த வதந்திக்கு ஒற்றை புகைப்படம் மூலம் தற்போது முற்று புள்ளி வைத்துள்ளார் நடிகை சினேகா. தன்னுடைய கணவர் பிரசன்னாவின் கண்ணதோடு கண்ணம் வைத்து... ஹாப்பி வீக் எண்டு என இவர் போட்டுள்ள போஸ்ட், விவாகரத்து முடிவை பொய்யாக்கியுள்ளதோடு, ரசிகர்களையும் நிம்மதியடைய செய்துள்ளது.
Bipasha Basu: 43 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்த விஜய் பட நடிகை..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!