Bipasha Basu: 43 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்த விஜய் பட நடிகை..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!
பாலிவுட் நடிகை பிபாஷா பாசு கர்ப்பமாக இருந்த நிலையில், இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த வாரம், பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திர ஜோடியான ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி அழகிய பெண் குழந்தைகயை பெற்றெடுத்த நிலையில், இந்த வாரம் மற்றொரு நட்சத்திர ஜோடியான பிபாஷா பாசு மற்றும் கரண் சிங் குரோவர் தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்த தகவல் வெளியாகியுள்ளது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிபாஷா பாசுவுக்கு, இன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை பிபாஷா பாசு மற்றும் கரண் சிங் குரோவர் தம்பதி விரைவில் அதிகார பூர்வமாக அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது. மேலும் தாயும் - குழந்தையும் நலமாக உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.
நடிகை பிபாஷா பாசு, தன்னுடைய கணவர் கரண் சிங் குரோவரை, ‘அலோன்’ படப்பிடிப்பில் சந்தித்தார். இதன் பின்னர் இருவரும் ஒரு வருடம் டேட்டிங் செய்த பின் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன் படி இந்த ஜோடிக்கு கடந்த ஏப்ரல் 30, 2016 அன்று திருமணம் நடந்தது. திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, கர்ப்பமான பிபாஷா பாசு, தன்னுடைய 43 வயதில் முதல் குழந்தையை பெற்றுடுத்துள்ளார்.
பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ள பிபாஷா, தமிழில் நடிகர் விஜய் நடித்த 'சச்சின்' படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிபிடித்தக்கது. திருமணத்திற்கு பின்னர் அதிகம் திரைப்படங்களில் நடிக்காத இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருந்தார். தற்போது பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள இவருக்கு, பாலிவுட் ரசிகர்கள், பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.