Samantha: கண்கலங்க வைக்கும் சமந்தாவின் நிலை? ஒரு கையில் ஊசி... மற்றொரு கையால் உடல் பயிற்சி ஷாக்கிங் வீடியோ..!

நடிகை சமந்தா தற்போது ஒரு கையில் ஊசியுடன், உடல் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி... அவரது ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது.
 

Actress samantha shocking gym workout video goes viral

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில், விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளவர் சமந்தா. லைம் லைட்டில் இருக்கும் போதே தன்னுடைய நீண்ட நாள் காதலரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட இவர், பலரும் பொறாமை படும் படி மிகவும் அன்பான மனைவியாகவும், பொறுப்பான மருமகளாகவும் இருந்தார். ஆனால் யார் கண் பட்டதோ... திடீர் என, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த ஆண்டு பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிவதாக இருவருமே அறிவித்தனர்.

Actress samantha shocking gym workout video goes viral

Biggboss Tamil 6: பர்சனல் அட்டாக் செய்யும் அமுதவாணன்... அறை வாங்குவார் தனலட்சுமி..! வெளியான பரபரப்பு புரோமோ..!

சமந்தா - நாக சைதன்யா முடிவு, அவரது ரசிகர்களுக்கு மட்டும் இன்று பிரபலங்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இருவருக்கு இடையேயும் சமாதான முயற்சிகள் மேற்கொண்ட போதும் தோல்வியிலேயே முடிந்ததாக கூறப்பட்டது. சுமார் ஒரு மாதம் வரை சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து குறித்த தகவல் சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்பட்டு வந்ததோடு, சில வதந்தைகளும் அடுத்தடுத்து வெளியானது. இவை அனைத்திற்கும் சமந்தா தன்னுடைய அறிக்கை மூலம் முற்று புள்ளி வைத்தது மட்டும் இன்றி, அவதூறாக செய்தி வெளியிட்ட சில ஊடகங்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது.

Actress samantha shocking gym workout video goes viral

விவாகரத்துக்கு பின்னர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா அதில் இருந்து மீண்டும், திரைப்பட பணிகளில் கவனம் செலுத்த துவங்கிய நிலையில், திடீர் என, ஆட்டோ இம்யூன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். மேலும் நினைத்ததை விட சில காலம் இந்த பிரச்சனை சரியாவதற்கு தேவை படுவதாக கூறி, கையில் குளுகோசுடன் டப்பிங் செய்த புகைப்படத்தையும் வெளியிட்டார்.

Bipasha Basu: 43 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்த விஜய் பட நடிகை..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!

இந்நிலையில் சமந்தா நடிப்பில் நேற்று வெளியான 'யசோதா' திரைப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தன்னுடைய ஜிம் பயிற்சியாளருடன்... சமந்தா இருக்கும் சில புகைப்படமும், சமந்தா ஒரு கையில் ஊசியுடன் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 

மேலும் இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில்...  எனக்கு பிடித்த ஜிலேபிக்கு தகுதியான அளவுக்கு நான் ஒர்க் அவுட் செய்தேன் என்று எனது பயிற்சியாளர் ஜுனைத் ஷேக் ஒருபோதும் நினைத்ததில்லை. அவர் யசோதாவின் வெற்றியை கொண்டாடுவதற்காக அந்த படத்தில் உள்ள ஆக்ஷன் காட்சியை நினைத்து பெருமைப் பட்டு எனக்கு வாழ்த்து தெரிவித்து ஜிலேபி கொடுத்தார். அவர் கடந்த சில மாதங்களாக என்னுடன் இருந்ததால் தான் இதனை என்னால் செய்ய முடிந்தது. இடைவிடாது எனக்கு ஊக்கமளித்தார் என கூறியுள்ளார். இந்த பதிவு மற்றும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Yashoda Box Office: வசூல் வேட்டையில் மிரட்டும் சமந்தாவின் 'யசோதா'...! முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios