அம்மா சொன்ன வார்த்தை..! சாபத்திற்கு பயந்து காதலை விட்டுக்கொடுத்த ஷிவின்..! கதையை கேட்டு கண்கலங்கிய ரக்ஷிதா!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக, தன்னுடைய காதல் பற்றி பேசி ரக்ஷிதாவை கண் கலங்க வைத்துள்ளார் ஷிவின்.
கடந்த மாதத்திற்கு முன், துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடி வரும் போட்டியாளர்கள் அவ்வப்போது தங்களுடைய கஷ்டங்கள், வாழ்க்கையில் நடந்த சந்தோஷமான விஷயங்கள், காதல், பிரிவு போன்றவற்றை தங்களுக்கு நம்பிக்கையான நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடிவரும் திருநங்கை போட்டியாளரான ஷிவின், ரக்ஷிதாவிடம் தன்னுடைய காதல் கதை குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார். மேலும் இந்த காதல் வாழ்க்கையில் இருந்து ஏன்? விலகினேன் என்பதையும் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடிவரும் திருநங்கை போட்டியாளரான ஷிவின், ரக்ஷிதாவிடம் தன்னுடைய காதல் கதை குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார். மேலும் இந்த காதல் வாழ்க்கையில் இருந்து ஏன்? விலகினேன் என்பதையும் தெரிவித்துள்ளார்.
அம்மாவின் வார்த்தையில் இருந்த உண்மையை புரிந்து கொண்ட ஷிவின், தன்னுடைய காதலரிடம் இருந்து விளங்கியதோடு... அவரிடம் பேசுவதையும் நிறுத்திவிட்டாராம். ஆனால் அவருடைய காதலன் பல முறை இவரிடம் பேச முயற்சித்துள்ளார். தற்போது சில கெட்டபழக்கத்திற்கு ஆளாகி அவர் சிங்கப்பூரில் வசித்து வருவதாக ஷிவின் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய இந்த அழகான வலி நிறைந்த காதல் கதையை கேட்டு ரக்ஷிதா கண்கலங்கி அழுதுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் ஷிவின் வாழ்க்கையில் இப்படி ஒரு காதல் கதை இருக்கும் என எதிர்பார்க்கவில்லை என தெரிவித்து வருகிறார்கள்.
பிக்பாஸ் போட்டியை சரியாக புரிந்து கொண்டு விளையாடி வரும் போட்டியாளர்களில் ஒருவர் ஷிவின், பொம்மை டாஸ்கில் கூட இவருடைய விளையாட்டை பார்த்து, தொகுப்பாளர் கமல் ஹாசன் வெகுவாக பாராட்டியதோடு, ஒரு அண்ணனாக உங்களுடன் நான் இருக்கிறேன் என கூறி உற்சாக படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bipasha Basu: 43 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்த விஜய் பட நடிகை..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!