எந்த ஒரு இளம் நடிகையும் செய்யாத செயல்..! சிம்பு பட நடிகை சித்தி இத்னானியை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்..!
நடிகர் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' பட நாயகி சித்தி இத்னானி முதியோர் இல்லத்திற்கு சென்று முதியோர்களை சந்தித்து... அவர்களுடன் நேரம் செலவிட்ட சில புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் இவரை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் சித்தி இத்னானி, இதை தொடர்ந்து... தமிழில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
அந்த வகையில் தற்போது, ஆர்யாவுக்கு ஜோடியாக புதிய படத்திலும், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 100 கோடி வானவில் என்கிற படத்திலும் சித்தி இத்னானி நடித்து வருகிறார். மேலும் சில தமிழ் பட இயக்குனர்கள் இவரிடம் கதை கூறி வருவதாகவும் கூறப்படுகிறது.
Bipasha Basu: 43 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்த விஜய் பட நடிகை..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!
தன்னுடைய முதல் படத்திலேயே அழகிய சிரிப்பால்... தமிழ் ரசிகர்களை வசியம் செய்து விட்ட... இவரின் மனசும் ரொம்ப அழகு என ரசிகர்கள் தற்போது புகழ்ந்து வருகிறார். பொதுவாகவே அனைவரிடமும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட நடிகை சித்தி இத்னானி, தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தை கூட வீணடிக்காமல், சமீபத்தில் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கு இருப்பவர்களிடம் அன்பாக பேசி மகிழ்ந்து இருக்கிறார்.
மேலும் அவர்களுக்கு தேவையான உணவு கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். சித்தி இத்னானி இந்த செயலை பாராட்டிய முதியோர்கள், அவரை வாழ்த்தி வழியனுப்பி உள்ளனர். இது குறித்த சில புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.