Pushpa 2 Movie: 'புஷ்பா 2' படத்தில் சமந்தா இடத்தை பிடித்த பிரபல நடிகை..! யார் தெரியுமா?
நடிகை சமந்தா 'புஷ்பா' படத்தின் முதல் பாகத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடிய நிலையில் இரண்டாம் பாகத்தில் டான்ஸ் ஆட உள்ள நடிகை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்' . இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படம், செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றாலும்... வசூலில் சக்கை போடு போட்டது. மேலும் இப்படத்தில், ஹீரோயினாக நடித்த ராஷ்மிகாவை விட, ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டதன் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்கள் மனதையும் ஈர்த்தார் நடிகை சமந்தா.
சமந்தாவின் ரசிகர்கள் பலர், இந்த பாடலுக்காக அவருக்கு கட்டவுட் வைத்து 'ஊ சொல்றியா மாமா பாடலை வரவேற்றனர். ஆரம்பத்தில் இந்த பாடலுக்கு சில எதிர்ப்புகள் கிளம்பினாலும், பின்னர் அந்த பிரச்சனை ஓய்ந்தது. பட்டி தொட்டி எங்கும் இந்த பாடல் ரீச்சான இந்த பாடலை, நடிகை ஆண்ரியா தன்னுடைய காந்த குரலில் பாடி இருந்தார்.
இரண்டு பாகமாக எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட புஷ்பா திரைப்படத்தின், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும், கவர்ச்சிக்கு குறைவில்லான ஹாட் ஐட்டம் சாங் ஒன்றை வைக்க படக்குழுவினர் திட்டம் போட்டுள்ளனர். அந்த வகையில் இந்த பாடலில், சமந்தா உடல்நிலை காரணமாக டான்ஸ் ஆட மறுத்துவிட்டதால் மற்றொரு முன்னணி நடிகையை கமிட் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இப்பாடலுக்கு, சமீபத்தில் குழந்தை பெற்ற நடிகை காஜல் அகர்வாலை தான் படக்குழு அணுகியுள்ளார்களாம். ஆனால், அவர் டான்ஸ் ஆடுவது தற்போது வரை உறுதி செய்யப்படாத நிலையில், விரைவில் இது குறித்த அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.