மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் நயன்தாரா..! புதிய போஸ்டருடன் வெளியான 'கனெக்ட்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!
நடிகை நயன்தாரா நடித்துள்ள 'கனெக்ட்' படத்தின் டீசர் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என தற்போது பட குழு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தமிழ் சினிமாவில் விஜய், அஜித், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தாலும்... அதிகபட்சமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதில் தான் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் நடிக்கும் படங்கள் சில தோல்வியை தழுவினாலும், பல படங்கள் முதலுக்கு மோசம் இல்லாமல் வசூல் செய்கிறது.
சமீபத்தில் கூட நயன்தாரா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்த O2 திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, நடிகை நயன்தாரா நடித்துள்ள 'கனெக்ட்' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக பிரபல நடிகர் வினய் நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கேர், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய 'ரவுடி பிக்சர்ஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். அஷ்வின் சரவணன் இந்த படத்தை திரில்லர் ஜர்னரில் இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் இயக்கத்தில் ஏற்கனவே நடிகை நயன்தாரா நடித்த 'மாயா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூல் சாதனை செய்த நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துள்ளார் நயன்தாரா.
மன்சூர் அலிகானுக்கு அடித்த ஜாக்பாட்..! மாஸ் நடிகர் படத்தில் மிரட்டல் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா?
இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் டீசர் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 18ஆம் தேதி, வெளியாகும் என தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் நயன்தாரா மண்டியிட்டு மன்னிப்பு கேட்பது போல் இருக்கும் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.