மேட்சிங்... மேட்சிங் உடையில்... நயன்தாராவை இறுக்கமாக கட்டிப்பிடித்து போஸ் கொடுத்த விக்கி! லேட்டஸ்ட் போட்டோஸ்!
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் கட்டிபிடித்தபடி இருக்கும், லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரியான நயன்தாரா, கடந்த ஜூன் மாதல் தான், தன்னுடைய நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தை தொடர்ந்து, இரண்டு முறை ஹனி மூன்... மற்றும் விக்கி பிறந்தநாளை துபாயில் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த நயன்தாரா, சமீபத்தில் தான் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடந்த மாதம்... இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டது. அதில், நயன் - விக்கி ஜோடி, நிபந்தனைகளை மீறும் விதத்தில் நடந்து கொள்ளவில்லை என்றும், நயன் - விக்கி ஜோடிக்கும் 2016 ஆம் ஆண்டே பதிவு திருமணம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நவம்பர் 18ஆம் தேதி நயன்தாராவின் 38வது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், நயன்தாரா குழந்தைகளை உடன் இருந்தே கவனித்து கொள்ள உள்ளதால்... திரைப்பட வாய்ப்புகளை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த முறை தன்னுடைய பிறந்தநாளை வீட்டிலேயே தான் நயன்தாரா கொண்டாட உள்ளாராம். இதில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திரைபிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
மன்சூர் அலிகானுக்கு அடித்த ஜாக்பாட்..! மாஸ் நடிகர் படத்தில் மிரட்டல் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா?
அவ்வப்போது விதவிதமாக ரொமான்டிக் புகைப்படம் எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, சில நாட்கள் கழித்து தங்களுடைய நண்பர்களுடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
இதில் இருவருமே வெள்ளை நிற மேட்சிங்... மேட்சிங் உடையில் இறுக்கமாக கட்டி அணைத்து போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Varisu Movie: 'வாரிசு' படத்தின் கிளைமேக்ஸ் காட்சி லீக்..! உச்ச கட்ட அதிர்ச்சியில் படக்குழு..!