மன்சூர் அலிகானுக்கு அடித்த ஜாக்பாட்..! மாஸ் நடிகர் படத்தில் மிரட்டல் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள 'தளபதி 67' படத்திலிருந்து மிஷ்கின் விலகியதாக கூறப்பட்ட நிலையில், அந்த இடத்தை பிரபல நடிகர் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் தற்போது 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டப்பிங் பணிகளும் ஒருபக்கம் துரிதமாக நடந்து வருகிறது.
'வாரிசு' படத்தில் நடித்து முடித்த கையோடு, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இரண்டாவது முறையாக இணைய உள்ளார் விஜய். விஜய்யின் 67 ஆவது படமாக உருவாக உள்ள இந்த படம் குறித்த தகவலும், அவ்வபோது சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது.
Varisu Movie: 'வாரிசு' படத்தின் கிளைமேக்ஸ் காட்சி லீக்..! உச்ச கட்ட அதிர்ச்சியில் படக்குழு..!
கேங்ஸ்டர் கதை அம்சம் கொண்ட இந்த படத்தில், விஜய்க்கு வில்லனாக மொத்தம் 5 முன்னணி நடிகர்கள் நடிப்பார்கள் என கூறப்பட்டது. அந்த வகையில் தற்போது சஞ்சய் தத் மற்றும் விஷால் ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், மலையாள திரையுலகை சேர்ந்த பிரிதிவிராஜ் நிவின் பாலி போன்ற பிரபலங்களையும் இந்த படத்தில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் அணுகிய நிலையில், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர்கள் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதே போல் தமிழ் சினிமாவில், இயக்குனராக மட்டுமின்றி வில்லனாகவும் குணசித்திர வேடத்திலும் நடித்து கலக்கி வரும் மிஷ்கினை வில்லன்களில் ஒருவராக நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் அணுகியுள்ளார். ஆரம்பத்தில் படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்ட போதிலும், விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளதாலும், சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் போன்ற இன்னும் சில படங்களில் நடித்து வருவதாலும், கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.
மேலும் மிஷ்கின் விலகிய வேகத்தில்... தற்போது மற்றொரு வில்லன் நடிகரை லோகேஷ் கனகராஜ் கமிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் வேறு யாரும் அல்ல, நடிகர் மன்சூர் அலி கான் தான். விஜயகாந்தின் பல படங்களில் வில்லனாக மிரட்டிய இவர், தற்போது காமெடி வேடத்தில் கூட நடித்து வரும் நிலையில், மீண்டும் லோகேஷ் கனகராஜ் படத்தில்... வில்லனாக மீண்டும் அவதாரம் எடுக்க உள்ளார்... இது அவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு என்றே கூறலாம். ஆனால் இது குறித்து எந்த அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' ரித்திகாவுக்கு திருமணம்..! அட மாப்பிள்ளை யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்!