அதிகாலையில் பரபரப்பு... நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் - பின்னணி என்ன?
மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீடருகே மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். அப்பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது. அதிகாலை 5 மணியளவில் பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டபடி சல்மான் கான் வீட்டை கடந்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் சல்மான் கானுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே அதிகளவில் கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இந்திய மாணவர் ஒருவர் சல்மான் கானுக்கு இமெயில் வாயிலாக கொலைமிரட்டல் விடுத்திருந்தார்.
இதையும் படியுங்கள்... Goat First single Release: தளபதி விஜய்யின் குரலில் வெளியாகும் 'GOAT' பட முதல் சிங்கிள் பாடல்! வெளியானது டீசர்!
இதுதவிர கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஸ்னோயின் இலக்காகவும் சல்மான் கான் இருந்து வந்தார். சல்மான் கான் கடந்த 1998ம் ஆண்டு மான்வேட்டையாடி சர்ச்சையில் சிக்கினார். பிஸ்னோய் சமூகத்தில் மான்வேட்டை ஆடுவது குற்றமாகும். அதனால் மான் வேட்டையாடிய சல்மான் கானை தீர்த்துக் கட்டும் முனைப்பில் இருந்து வந்தார் லாரன்ஸ் பிஸ்னோய், ஆனால் அவர் தற்போது சிறையில் இருக்கிறார்.
அதேபோல் தன்னுடைய கூட்டாளி நெஹ்ரா சல்மான் கான் வீட்டின் மீது தாக்குதல் நடத்துவார் என்றும் லாரன்ஸ் எச்சரித்திருந்தார். இதையடுத்து நெஹ்ராவை சிறப்பு படை அமைத்து ஹரியானா போலீஸ் கைது செய்தது. இப்படி தொடர் மிரட்டல்கள் வருவதால் நடிகர் சல்மான் கானிற்கு மும்பை போலீஸ் ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Siren OTT : தியேட்டரில் டல் அடித்த சைரன்... ஓடிடியில் சாதனை படைக்குமா? அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு