MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Siren OTT : தியேட்டரில் டல் அடித்த சைரன்... ஓடிடியில் சாதனை படைக்குமா? அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Siren OTT : தியேட்டரில் டல் அடித்த சைரன்... ஓடிடியில் சாதனை படைக்குமா? அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

அந்தோணி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்த சைரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 14 2024, 08:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Siren Movie

Siren Movie

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஹீரோவாக நடித்த பின்னர் நடிகர் ஜெயம் ரவியின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இதையடுத்து அரை டஜன் படங்களில் கமிட்டான அவருக்கு சோலோ ஹீரோவாக கடந்த சில ஆண்டுகளாக ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு அவர் சோலோ ஹீரோவாக நடித்து வெளிவந்த அகிலன், இறைவன் ஆகிய இரண்டு படங்களும் தியேட்டரில் ரிலீஸ் ஆகி அட்டர் பிளாப் ஆனது.

24
Anupama Parameswaran, Jayam Ravi

Anupama Parameswaran, Jayam Ravi

இதனால் 2024-ம் ஆண்டு அவருக்கு சக்சஸ்புல் ஆண்டாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி இந்த ஆண்டு அவர் நடிப்பில் சைரன் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது. இப்படத்தை அந்தோணி பாக்கியராஜ் இயக்கி இருந்தார். இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஆகியோர் நடித்திருந்தனர்.

இதையும் படியுங்கள்... 5 மொழிகளில் தேசிய விருது.. டாப் நடிகர்களுக்கு ஜோடி மட்டும் ஆகவில்லை.. இந்த தமிழ் நடிகை தெரியுமா?

34
Jayam Ravi, Keerthy suresh

Jayam Ravi, Keerthy suresh

இப்படத்தின் மூலம் ஜெயம் ரவி கம்பேக் கொடுப்பார் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த சைரன் திரைப்படம் ரசிகர்களை கவரத் தவறியது. இதனால் அவர் சோலோ ஹீரோவாக ஹாட்ரிக் தோல்வியை கண்டுள்ளார். வழக்கமாக ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 28 நாட்களில் ஓடிடிக்கு வந்துவிடும். ஆனால் சைரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி நீண்ட நாட்களாக அறிவிக்கப்படாமல் இருந்தது.

44
Siren OTT release Date

Siren OTT release Date

இந்த நிலையில், ஒரு வழியாக சைரன் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகும் என அறிவித்து உள்ளனர். தியேட்டரில் பிளாப் ஆன இப்படம் ஓடிடியில் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... ஜெயம் ரவி - துல்கர் சல்மானை தொடர்ந்து மணிரத்னத்தின் 'தக் லைஃப்' படத்தில் இருந்து விலகிய முன்னணி நடிகர்?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அனுபமா பரமேஸ்வரன்
ஜெயம் ரவி
கீர்த்தி சுரேஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved